விஜய் - டி.கே. சிவகுமார் Pt web
இந்தியா

”முதல்வர் விஜய் இப்போதைக்கு வரவேண்டாம்“ - கர்நாடக முதல்வர் சிவக்குமார் வேண்டுகோள்!!

பதற்றமான சூழல் நிலவுவதால், தமிழ்நாடு முதல்வர் விஜய் இப்போதைக்கு கர்நாடகா வரவேண்டாம் என அம்மாநில முதல்வர் டி.கே. சிவக்குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.

Premkumar S

காவிரி நீர் தொடர்பான பிரச்னை தமிழ்நாடு - கர்நாடக இடையே பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. இதனிடையே, சமீபத்தில் டெல்லி காவிரி நீர் ஒழுங்குபடுத்தும் கூட்டம் தமிழகத்திற்கு 15 நாட்களுக்கு தினமும் 3,500 கன அடி வீதம் நீர் திறக்க உத்தரவிட்டிருந்தது. ஆனால், குறைவான மழைப்பொழிவு காரணமாக தண்ணீர் திறக்க முடியாது என கர்நாடகா கூறி வரும் நிலையில், இன்னும் கர்நாடக அரசு இன்னும் தண்ணீர் திறக்கவில்லை. இந்தசூழலில் தான், மேகதாது விவகாரம் மற்றும் காவிர் நீர் திறப்பு குறித்து பேசுவதற்காக தமிழக முதல்வர் விஜய் கர்நாடக செல்வார் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேகதாது அணை

எனினும், மேகதாது பிரச்னையை சட்ட வழியில் மட்டுமே எதிர்கொள்ள வேண்டும் எனவும் கர்நாடக முதல்வருடனான சந்திப்பு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வரும் நிலையில், முதல்வர் விஜயின் கர்நாடக பயணத்துக்கு அம்மாநிலத்தை சேர்ந்த அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. எனினும்,  தமிழக முதல்வர் விஜய்யை மிகுந்த கௌரவத்துடன் வரவேற்போம் என கர்நாடக முதல்வர் டி.கே. சிவக்குமார் தெரிவித்திருந்தார்.

இந்தசூழலில் தான், ஆகஸ்ட் 3-ல் முதல்வர் விஜய் கர்நாடக செல்வது ஏறத்தாழ உறுதியாகியிருந்தது. ஆனால், தற்போது செய்தியாளர்களை சந்தித்திருக்கும் கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார், முதல்வர் விஜய் இப்போதைக்கு கர்நாடகா வரவேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் பேசுகையில், பதற்றமான சூழலில் தமிழ்நாடு முதல்வர் விஜய் வரும்போது போராட்டம் நடந்தால் எப்படி சமாளிப்பது?; வேறொரு தேதியில் சந்திப்பு கூட்டத்தை நடத்தலாம் என விஜய்க்கு கோரிக்கை வைக்கிறேன். சிறிது காலம் காத்திருக்கலாம்; உரிய நேரம் வரும்போது இருவரும் சந்தித்து ஆலோசிப்போம்“ எனத் தெரிவித்திருக்கிறார்.

இதன்மூலம், முதல்வர் விஜயின் கர்நாடக பயணம் ரத்தாகியிருக்கிறது.