இந்தியா

பிரதமர் மோடியை நாளை சந்திக்கிறார் குமாரசாமி

பிரதமர் மோடியை நாளை சந்திக்கிறார் குமாரசாமி

Rasus

கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி, பிரதமர் மோடியை நாளை சந்திக்கிறார்.

இதற்காக நாளை காலை 10 மணிக்கு பெங்களூருவிலிருந்து விமானத்தில் செல்லும் முதலமைச்சர் குமாரசாமி, டெல்லியில் உள்ள கர்நாடகா இல்லத்தில் தங்குகிறார். பிற்பகல் 3.30 மணிக்கு அண்ணல் காந்தியடிகளின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகிறார். பின்னர், மாலை 5.30 மணி அளவில் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கிறார். அதைத்தொடர்ந்து, நிதித்துறையை கூடுதலாக கவனித்து வரும் நிலக்கரித்துறை அமைச்சர் பியூஸ் கோயலைச் சந்திக்கிறார். பின்னர் இரவு 8.30 மணிக்கு டெல்லியிலிருந்து விமானம் மூலம் பெங்களூரு திரும்புகிறார்.

கடந்த 25-ஆம் தேதி கர்நாடக சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் குமாரசாமி தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதாதளக் கூட்டணி அரசு வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.