கர்நாடக அரசின் நிர்வாகத்தில் உள்ள கோயில்களில் தலித் அர்ச்சகர்கள் நியமிக்கப்படுவார்கள் என அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
கேரளாவில் திருவிதாங்கூர் தேவசவம் போர்டு, பார்ப்பனர் அல்லாத 36 பேரை அர்ச்சகர்களாக்கி சாதனை படைத்திருக்கிறது. இதில் ஆறு அர்ச்சகர்கள் தலித்கள். இதை பல்வேறு அரசியல் கட்சிகள் வரவேற்றுள்ளன. கேரள அரசுகும் பாராட்டுகள் குவிந்து வருகிறது.
இந்நிலையில் கர்நாடக அரசின் நிர்வாகத்தில் உள்ள கோயில்களில் தலித் அர்ச்சகர்கள் நியமிக்கப்படுவார்கள் என அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார். அரசின் இம்முடிவுக்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கமுடியாது என்றும் மைசூருவில் அவர் பேசினார்.