இந்தியா

அதிருப்தி எம்எல்ஏக்களை சந்திக்க குமாரசாமி மும்பை பயணம்?

அதிருப்தி எம்எல்ஏக்களை சந்திக்க குமாரசாமி மும்பை பயணம்?

webteam

பதவி விலகிய மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் எம்எல்ஏக்களைச் சந்தித்துப் பேச கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி இன்று மும்பைக்குச் செல்லவிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மும்பை நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் அதிருப்தி எம்எல்ஏக்கள் 14 பேரையும் சந்திக்க குமாரசாமி மும்பைக்கு வரவிருப்பதாகக் கூறப்படுகிறது.

குமாரசாமியை சந்திக்க விரும்பவில்லை என்று தாங்கள் அனைவரும் சேர்ந்து அவருக்கு கடிதம் அனுப்பி உள்ளதாக மதச்சார்பற்ற ஜனதா தள அதிருப்தி எம்எல்ஏ நாராயண கவுடா தெரிவித்துள்ளார். தாங்கள் தங்கியிருக்கும் நட்சத்திர விடுதிக்குள் குமாரசாமி அதிரடியாக நுழையத் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் கிடைத்திருப்பதாகவும், அதனால் அச்சமடைந்துள்ளதாகவும் காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்கள் கூறியிருக்கின்றனர். 

ஆகவே தங்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கும்படி மும்பை காவல் ஆணையருக்கு கடிதம் அனுப்பி இருப்பதாக காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்கள் தெரிவி்த்துள்ளனர்.