தீப்பிடித்து எரிந்த பேருந்து pt desk
இந்தியா

கர்நாடகா: திடீரென தீப்பிடித்து எரிந்த பேருந்து... ஓட்டுநரின் சாதுர்யத்தால் உயிர்தப்பிய பயணிகள்!

கர்நாடக மாநில தேசிய நெடுஞ்சாலையில் 30 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த தனியார் பேருத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து ஏற்பட்டது. ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் பயணிகள் உயிர் தப்பினர்.

PT WEB

செய்தியாளர்: ம.ஜெகன்நாத்

கர்நாடக மாநிலம் தவனகேரே பகுதியில் நேற்று 30 பயணிகளுடன் தனியார் சொகுசு பேருந்து ஒன்று பெங்களுர் நோக்கி புனே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது அதிகாலை சொகுசு பேருந்து சித்ரதுர்கா மாவட்டம் ஹிரியூர் தாலுகாவில் உள்ள குயிலால் சுங்கச்சாவடி அருகே சென்றபோது எதிர்பாராத வகையில் பேருந்தின் முன்பக்கம் புகை வந்துள்ளது.

தீப்பிடித்து எரிந்த பேருந்து

இதை பார்த்த ஓட்டுநர், சுதாரித்துக் கொண்டு உடனடியாக பேருந்தை நிறுதியுள்ளார், அதற்குள் பேருந்து தீப்பிடித்து மள மளவென எரிந்தது. இதையடுத்து பேருந்தில் பயணம் செய்து 30 பயணிகளும் அவசர அவசரமாக கீழே இறக்கினர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துணையினர் தண்ணீரை பீச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர் அதற்குள் பேருந்து முற்றிலுமாக எரிந்து எலும்புக் கூடாக காட்சியளித்தது.

இந்த சம்பவம் குறித்து ஐமங்கலம் போலீசார் விசாரணை நடத்தினர். முதல் கட்ட விசாரணையில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கும் என போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.