இந்தியா

கர்நாடகாவில் 2 லட்சம் சுகாதாரப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி: அரசு தகவல்

கர்நாடகாவில் 2 லட்சம் சுகாதாரப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி: அரசு தகவல்

Veeramani

2 லட்சத்துக்கும் மேற்பட்ட சுகாதாரப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட்ட முதல் மாநிலமாக கர்நாடகா திகழ்கிறது என அரசின் தகவல்கள் தெரிவிக்கிறது

கோவிட்-19 வைரஸை தடுப்பதற்காக,  2 லட்சத்துக்கும் மேற்பட்ட சுகாதாரப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போட்ட நாட்டின் முதல் மாநிலமாக கர்நாடகா மாறியுள்ளது. இன்று பிற்பகல் 2:00 மணி நிலவரப்படி, கோவிட்-19 க்கு எதிராக 2,06,577 சுகாதாரப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், நாடு முழுவதும் கொரோனா வைரஸ்க்கு எதிராக தடுப்பூசி போடப்பட்ட சுகாதார ஊழியர்களின் எண்ணிக்கை நேற்று இரவு 7:30 மணி வரை 28,613 மையங்களில் 16 லட்சத்தை (16,13,667) தாண்டியுள்ளது என்று சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் (MoHFW) தற்காலிக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 13,203 புதிய கோவிட்-19 வழக்குகள் பதிவாகியுள்ளன, 13,298 குணமாகி வீடு திரும்பியுள்ளனர் என்றும், 131 இறப்புகள் பதிவாகியுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டது. தற்போது நாட்டில் மொத்தம் 1,84,182 கொரோனா வழக்குகள் செயலில் உள்ளன என்றும், இதுவரை மொத்தம் 1,53,470 பேர் உயிரிழந்துள்ளனர் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்தது.