Bjp-Congress
Bjp-Congress File image
இந்தியா

கர்நாடகா தேர்தல்: எத்தனை இடங்களில் காங்கிரஸ் - பாரதிய ஜனதா - மஜத கட்சிகள் முன்னிலை?

சங்கீதா

கர்நாடக மாநிலத்தில் உள்ள 224 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான‌ வாக்குப்பதிவு கடந்த 10-ம் தேதி நடைபெற்ற‌து. இதில் முன்னெப்போதும் இல்லாத வகையில் 73.19% வாக்குகள் பதிவாகியிருந்தன. தென்னிந்தியாவில் பாஜக ஆட்சியில் இருக்கும் ஒரே மாநிலமாக கர்நாடகா இருந்து வந்தது.

கடந்த 10-ம் தேதி நடந்த வாக்குப்பதிவை தொடர்ந்து, பதிவான வாக்குகளை இன்று 36 மையங்களில் எண்ணும் பணி காலை 8 மணி முதல் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், காலை 11 மணி நிலவரப்படி

* காங்கிரஸ் கட்சி 118 தொகுதிகளிலும்,

* பாரதிய ஜனதா கட்சி 73 தொகுதிகளிலும்

* மதச்சார்பற்ற ஜனதா தளம் 25 இடங்களிலும்

முன்னிலை வகிக்கின்றன.

இதில் கர்நாடகா மாநிலத்தில் ஆட்சி அமைக்க பெரும்பான்மைக்கு தேவையான 113 இடங்களைக் காட்டிலும், அதிக இடங்களில் காங்கிரஸ் கட்சி முன்னிலையில் இருந்து வருவதால், அக்கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த தேர்தலில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி 224 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 223 தொகுதிகளிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி 207 தொகுதிகளிலும் போட்டியிட்டன. இந்தக் கட்சிகளை தவிர இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ஆம் ஆத்மி, பகுஜன் சமாஜ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளும் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.