இந்தியா

கர்நாடகா சட்டப்பேரவை 10 நிமிடங்கள் ஒத்திவைப்பு

கர்நாடகா சட்டப்பேரவை 10 நிமிடங்கள் ஒத்திவைப்பு

Rasus

கர்நாடகா சட்டப்பேரவையில் கடும் அமளி நிலவியதையடுத்து அவை 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

கர்நாடகாவில் ஆளும் கூட்டணியை சேர்ந்த 15 அதிருப்தி எம்எல்ஏக்கள் ராஜினாமா கடிதம் அளித்துள்ள நிலையில் அம்மாநில அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முதலமைச்சர் குமாரசாமி, தன் அரசு மீதான நம்பிக்கை கோரும் தீர்மானத்தை கடந்த வியாழக்கிழமை கொண்டு வந்தார். ஆனால் தீர்மானத்தின் மீதான விவாதம் இரு நாட்கள் நடந்த நிலையில் வாக்கெடுப்பு நடைபெறவில்லை. இதனிடையே இன்றே நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என கர்நாடகா சபாநாயகர் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தள கட்சியை சேர்ந்த எம்எல்ஏக்களின் அமளியால் அவை 10 நிமிடம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அனைத்து உறுப்பினர்களும் பேச அனுமதி வழங்க வேண்டும் என அமளியில் ஈடுபட்டதால் அவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.