இந்தியா

கர்நாடகா: ஊருக்குள் ஹாயாக உலாவந்த முதலை; செல்போனில் படம்பிடித்த மக்கள்

கர்நாடகா: ஊருக்குள் ஹாயாக உலாவந்த முதலை; செல்போனில் படம்பிடித்த மக்கள்

kaleelrahman

கர்நாடக மாநிலத்தில் கார்வார் அருகே ஆற்றில் இருந்து வெளியேவந்த முதலை ஊருக்குள் புகுந்து ஹாயாக உலாவந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

கர்நாடக மாநிலம் உத்தரகன்னடா மாட்டம் கார்வார் அருகே பிரபல சுற்றுலா தலமாக தண்டேலி உள்ளது. இதன் அருகே உள்ள கோகிலபனா என்ற கிராமத்தை ஒட்டி காளி ஆறு ஓடுகிறது. இந்த ஆற்றில் அதிகளவில் முதலைகள் வசிக்கின்றன. இந்த நிலையில் காளி ஆற்றில் இருந்து வெளியே வந்த ஒரு முதலை மெதுவாக ஊர்ந்தபடி கோகிலபனா கிராமத்திற்குள் நுழைந்தது.

இதையடுத்து அந்த கிராமத்தின் தெருக்களில் ஹாயாக உலா வந்த முதலையை முதலில் பார்த்த மக்கள் அலறியடித்து ஓடிய நிலையில், பின்னர் முதலையை பின்தொடர்ந்து சென்றனர். மேலும் செல்போனில் முதலையை படம் பிடித்தும் மகிழ்ந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் வனத்துறையினர் விரைந்து வந்தனர். பின்னர் கயிற்றால் முதலையை கட்டி மீண்டும் காளி ஆற்றில் விட்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியது.