இந்தியா

போராட்டத்திற்கு முன்னுதாரணமான தமிழகம்..!

Rasus

தமிழகத்தில் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக நடைபெற்ற போராட்டத்தைப் போல் கர்நாடகாவில் எருது பந்தயத்திற்கு ஆதரவாக போராட்டம் தொடங்கியுள்ளது.

விலங்கு நல ஆர்வலர்கள் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பில், தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த 2014-ல் உச்சநீதிமன்றம் தடை விதித்தது. ஆனால் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிகத்தில் நடைபெற்ற தன்னெழுச்சி போராட்டம் காரணமாக தமிழக அரசு அவசரச் சட்டம் இயற்றி ஜல்லிக்கட்டிற்கான தடையை நீக்கியுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் தற்போது தடையின்றி ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த இயலும்.

இந்நிலையில் கர்நாடகாவில், விலங்கு நல அமைப்புகளால் தடைக்கு உள்ளாகியுள்ள கம்பலா எனப்படும், எருது விடும் பந்தயத்திற்கு ஆதரவு தெரிவித்து அங்குள்ள மக்கள் தங்களது போராட்டத்தை தொடங்கியுள்ளனர். மங்களூருவில் ஒன்று திரண்ட மக்கள் இதற்கான போராட்டத்தை நடத்தினர். ஜல்லிக்கட்டு போராட்டத்தால் தமிழக மக்களுக்கு வெற்றி கிடைத்ததை போல், எருதுவிடும் விழாவிற்கும் வெற்றி கிடைக்கும் என்பது கர்நாடக போராட்டக்காரர்களின் எண்ணமாக உள்ளது.