கர்நாடக மாநில முதலமைச்சராகப் பொறுப்பேற்க உள்ள குமாரசாமி, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்தார்.
காங்கிரஸ் ஆதரவோடு, கர்நாடகாவில் முதலமைச்சராகப் பொறுப்பேற்கும் குமாரசாமி, புதன்கிழமை நடைபெறும் பதவியேற்பு விழாவில் பங்கேற்க ராகுல்காந்திக்கு அழைப்புவிடுத்துள்ளார். மேலும், புதிய அமைச்சரவையில் இடம்பெறும் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதள உறுப்பினர்கள், அமைச்சரவை இலாக்காக்கள் தொடர்பாகவும் அவர் ஆலோசனை நடத்தியதாகத் தெரிகிறது. இதுதொடர்பாக, சோனியாகாந்தியையும் சந்தித்து குமாரசாமி ஆலோசனை நடத்த இருக்கிறார்.
முன்னதாக, டெல்லி சென்ற குமாரசாமி, பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதியைச் சந்தித்து அழைப்பு விடுத்தார். மேலும், பாரதிய ஜனதா ஆளாத மாநிலங்களின் முதல்வர்களுக்கு அழைப்பு விடுத்துள்ள அவர், தமிழகத்தில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் அழைப்புவிடுத்துள்ளார்.