கர்நாடகா மாநிலம் ஜெயநகர் சட்டமன்ற தொகுதி தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் சவுமியா ரெட்டி வெற்றி பெற்றுள்ளார்.
கர்நாடக சட்டப்பேரவை தேர்தலின் போது ஜெயநகர் தொகுதியில் பாஜக வேட்பாளர் விஜயகுமார் இறந்ததன் காரணமாக தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 11-ஆம் தேதி அத்தொகுதியில் தேர்தல் நடைபெற்றது. இதில் காங்கிரஸ், பாரதிய ஜனதா உட்பட மொத்தம் 19 வேட்பாளர்கள் களமிறங்கினர். 55 சதவிகிதம் வாக்குப்பதிவு ஆன நிலையில் வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது.
வாக்கு எண்ணிக்கையின் முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் சவுமியா ரெட்டி 2,889 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். மொத்தமாக 54 ஆயிரத்து 457 வாக்குகள் அவர் பெற்றார். இந்த வெற்றி மூலம் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 80 ஆக உயர்ந்துள்ளது. பாஜக வேட்பாளர் பிரகலாத் பாபு 51 ஆயிரத்து 568 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.