நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட தீர்ப்பை திரும்பப் பெறக் கோரி நீதிபதி கர்ணன் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தால் நீதிமன்ற அவமதிப்பிற்காக ஆறு மாத சிறை தண்டனை விதிக்கப்பட்ட கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணனைக் கைதுசெய்வதற்காக கொல்கத்தாவைச் சேர்ந்த காவலர்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தனக்கு விதிக்கப்பட்ட 6 மாத சிறைத் தண்டனையை திரும்ப பெறக் கோரி உச்சநீதிமன்றத்தில் கர்ணன் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நீதிபதி கர்ணன் தரப்பில் வழக்கறிஞர் மேத்யூ இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.
அதில் உச்சநீதிமன்ற உத்தரவு தனது அடிப்படை உரிமையை பறிப்பதாகும் எனவும், வெளிநாடு செல்லவில்லை என்றும், எங்கும் ஓடவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த மனுவை பரிசீலிப்பதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளதாக டெல்லி வட்டார வழக்கறிஞர் தகவல் தெரிவித்துள்ளனர்.