கரீனா கபூர் web
இந்தியா

”மாணவர்கள் கேட்பது மிகப்பெரிய கோரிக்கை அல்ல; அடிப்படை உரிமை” - கரீனா கபூர் ஆதரவு!

டெல்லியில் நீட் முறைகேடுக்கு எதிராக போராட்டம் நடத்திவரும் மாணவர்களுக்கு ஆதரவாக பாலிவுட் நடிகை கரீனா கபூர் பதிவிட்டுள்ளார்.

Rishan Vengai

டெல்லி மாணவர்கள், இளைஞர்கள் கல்வி அமைப்பில் வெளிப்படைத்தன்மை கோரி நடத்தும் போராட்டம் குறித்து கரீனா கபூர் கான் நீண்ட மௌனத்தை முறித்து கருத்து தெரிவித்துள்ளார். ஒரு தலைமுறை தங்கள் எதிர்காலத்திற்காக ஒரே குரலில் பேசும் போது, அதை கேட்பது மரியாதை அல்ல, கடமை என்றும், நேர்மைக்கும் திறமைக்கும் உண்மையான மதிப்பு தரும் அமைப்பு தேவை என்றும் வலியுறுத்தியுள்ளார்.

டெல்லியில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் நடத்தி வரும் தொடர் போராட்டங்களுக்கும், கல்வி அமைப்பில் வெளிப்படைத்தன்மை கோரும் குரல்களுக்கும் ஆதரவாகப் பாலிவுட் பிரபலநடிகை கரீனா கபூர் கான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அவருடைய பதிவில், "கடந்த சிலநாட்களாக இதைப்பற்றி யோசித்துக்கொண்டிருந்தேன்; ஆனால் இனிமேலும் அமைதியாக இருக்க முடியாது. தங்கள் குரல் கேட்கப்பட வேண்டும் என கோரிக்கை வைக்கும் ஏராளமான இளைஞர்களின் குரல்களை இனிமேலும் புறக்கணிக்கமுடியாது... புறக்கணிக்கவும் கூடாது. ஒருகுழந்தைக்குக் கல்வி எவ்வளவு முக்கியமானது என்பதை நாம் அறிவோம். அது அவர்களுக்குத் தன்னம்பிக்கையையும், நம்பிக்கையையும் அளிக்கிறது. இன்றைய தினத்தை விட நாளை சிறப்பானதாக இருக்கும் என்ற நம்பிக்கையைக் குடும்பங்களுக்குத் தருகிறது. ஆனால், குழந்தைகள் அதன் மீதுநம்பிக்கை வைத்தால் மட்டுமே கல்வியால் பலன் உண்டு.

நேர்மை,உழைப்பு மற்றும் திறமைக்கு மதிப்பில்லை என்ற சந்தேகம் எப்போது வருகிறதோ, அப்போதே அவர்கள் கல்வியின் மீதான நம்பிக்கையை இழந்துவிடுகிறார்கள். தங்களது உழைப்புபோதுமானதா என்று எந்தக்குழந்தையும் யோசிக்கும் நிலைவரக்கூடாது. நேர்மைக்கும் திறமைக்கும் உண்மையான மதிப்பு அளிக்கப்படும், உழைப்பிற்கு ஏற்ற பலன் கிடைக்கும், அனைவரும் சமமாக நடத்தப்படும் ஒரு நம்பிக்கையான அமைப்பு அவர்களுக்குத் தேவை. இது மிகப்பெரிய கோரிக்கை அல்ல, இது ஒரு அடிப்படைஉரிமை.

ஒரு முழுத் தலைமுறையும் தங்களின் எதிர்காலத்திற்காக ஒரேகுரலில் பேசும்போது, அதைக் கேட்பது நாம் காட்டும் மரியாதை அல்ல; அது அவர்களுக்குச்செய்ய வேண்டிய கடமை. நாம் அவர்களை கவனிப்பது போலவே குழந்தைகளும் நம்மைஉற்று கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். நாம் இப்போது -உடனடியாக எவ்வாறு செயல்படுகிறோம் என்பதே, 'நேர்மை' மற்றும் 'நம்பிக்கை' ஆகியவை உண்மையானவையா அல்லது பெரியவர்கள் பயன்படுத்தும் வெறும் வார்த்தைகளா என்பதை அவர்களுக்குஉணர்த்தும்” என்று பதிவிட்டுள்ளார்.