இந்தியா

காரைக்கால் திருவிழாவுக்காக டன் கணக்கில் இறங்கும் மாம்பழங்கள்... அதிரடி ஆய்வில் அதிகாரிகள்

kaleelrahman

காரைக்காலில் வரும் 13-ஆம் தேதி நடைபெற உள்ள மாங்கனி திருவிழாவை முன்னிட்டு டன் கணக்கில் இறக்குமதியான மாம்பழங்களை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் உலகப் புகழ்பெற்ற காரைக்கால் அம்மையார் மாங்கனி திருவிழா இன்று இரவு மாப்பிள்ளை அழைப்புடன் தொடங்க உள்ளது. இதையடுத்து நாளை மறுதினம் 13-ஆம் தேதி பிச்சாண்டு மூர்த்தி வீதி உலாவில் மாம்பழம் இரைத்தல் நிகழ்வு நடைபெற உள்ளது.

இதை முன்னிட்டு காரைக்கால் மாவட்டத்திற்கு, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் விற்பனைக்காக டன் கணக்கில் மாம்பழங்கள் இறக்குமதியாகியுள்ளது. இந்நிலையில் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அனைத்து பழக்கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள மாம்பழங்களை, உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி ரவிச்சந்திரன் தலைமையில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த ஆய்வின்போது ரசாயனம் மூலம் பழங்கள் பழுக்க வைக்கப்படுகிறதா என்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் ரசாயனம் மூலம் பழங்கள் பழுக்க வைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் எச்சரிக்கை செய்தனர்.