இந்தியா

8 கால்கள்.. 2 உடல்களுடன் ஒட்டிப் பிறந்த ஆட்டுக்குட்டி 

8 கால்கள்.. 2 உடல்களுடன் ஒட்டிப் பிறந்த ஆட்டுக்குட்டி 

webteam

காரைக்காலில் அதிசய நிகழ்வாக எட்டுக் கால்கள், இரண்டு உடல்கள் மற்றும் ஒரு தலையுடன் ஆட்டுக்குட்டி பிறந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் பெரியபள்ளிவாசல் அடுத்துள்ள சுண்ணாம்புகார வீதியில் வசித்து வரும் அப்துல் கவுஸ் என்பவர் வீட்டில் சிறு ஆட்டுப்பண்ணை வைத்து நடத்தி வருகிறார். அவர் வளர்த்து வரும் ஆடுகளில் ஒன்று முதலில் மூன்று குட்டிகளை ஈன்றெடுத்து. 

அடுத்து நான்காவது குட்டியை ஈன்று எடுத்துக் கொண்டிருந்தபோது முதலில் எட்டு கால்கள் வெளியே வந்தது பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. இறுதியில் இரண்டு உடல்கள் ஒரு தலையுடன் ஒரு ஆட்டுக்குட்டி வெளியே வந்ததுபோது அந்த ஆட்டுக்குட்டி மூச்சு விட முடியாமல் திணறியது.

இதனையடுத்து ஆட்டுக்குட்டிக்கு முதலுதவி செய்தனர். ஆனால் முதலுதவி பயனளிக்காமல் அரை மணி நேரத்தில் அந்த ஆட்டுக்குட்டி இறந்தது. இந்த அதிசய ஆட்டுக்குட்டியை காண அக்கம்பக்கத்தினர் ஆச்சரியத்துடன் வந்து பார்த்துச் சென்றனர்.