இந்தியா

காரைக்கால்: பள்ளி மாணவனுக்கு பாலியல் தொல்லை – செக்யூரிட்டி போக்சோவில் கைது

webteam

காரைக்காலில் 12 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக பள்ளி செக்யூரிட்டியை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

காரைக்கால் மாவட்டத்தில் மத்திய அரசு கல்வி நிறுவனமொன்று உள்ளது. அந்தப் பள்ளியில், நாகை மாவட்டத்தைச் சேர்ந்த 12வயது சிறுவன் படித்து வருகிறார். கடந்த 14 ஆம் தேதி அதிகாலை பள்ளி வளாகத்தில் தூங்கி கொண்டிருந்த அந்த மாணவனுக்கு அதே பள்ளியில் செக்யூரிட்டியாக பணியாற்றும் முகமது அலி என்பவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதையடுத்து உடல் நலம் பாதிக்கப்பட்ட சிறுவன், நடந்ததை பள்ளி பொறுப்பாசிரியரிடம் கூறியுள்ளார். இது குறித்து தகவல் அறிந்த சிறுவனின் தந்தை பள்ளிக்கு விரைந்து வந்து நடந்தவற்றை கேட்டறிந்து, காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதைத் தொடர்ந்து புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார், பள்ளியில் செக்யூரிட்டியாக பணிபுரியும் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த முகமது அலி என்பவரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது முகமது அலி உண்மையை ஒப்புக்கொண்டதை அடுத்து அவரை கைது செய்த கோட்டுச்சேரி போலீசார், காரைக்கால் போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புதுச்சேரி மத்திய சிறைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து உடல் நலம் பாதிக்கப்பட்ட சிறுவனை காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.