இந்தியா

கனிஷ்க் நிறுவன 281 கோடி ரூபாய் சொத்துகள் முடக்கம்

கனிஷ்க் நிறுவன 281 கோடி ரூபாய் சொத்துகள் முடக்கம்

webteam

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் கனிஷ்க் நகைவிற்பனை நிறுவனத்திற்கு சொந்தமான 138 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. 

தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் உள்ளிட்ட 14 வங்கிகளிலிருந்து கனிஷ்க் நிறுவனம் 824 கோடி ரூபாய் கடன் பெற்றது. ஆனால் இதுவரை அந்த கடன்கள் திருப்பி செலுத்தப்படாததையடுத்து வங்கி முறைகேட்டில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறையால் அந்நிறுவனத்தின் சொத்துகள் முடக்கப்பட்டு வருகின்றன. 

ஏற்கெனவே, 48 கோடி ரூபாய் மற்றும் 143 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ள நிலையில், மூன்றாவது முறையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக, இதுவரை வரை கனிஷ்க் நிறுவனத்தின் 281 கோடி ரூபாய் சொத்துகள் அமலாகத்துறையால் முடக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.