இந்தியா

“கல்கி பகவான் வாரிசுகள் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை”- அதிகாரிகள்  

webteam

ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகா உள்பட நாட்டில் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் கல்கி ஆசிரமத்திற்குச் சொந்தமான இடங்களில் வரி ஏய்ப்பு நடப்பதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில், வருமான வரித்துறை கடந்த 16-ஆம் தேதி சோதனையைத் தொடங்கியது. 400-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். 

நேற்று காலை 11 மணிக்கு சோதனை நிறைவு பெற்றதாக வருமானவரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். சோதனையின் முடிவில் கணக்கில் வராத 44 கோடி ரூபாய் ரொக்கம், 800 கோடி ரூபாய் வருவாய், பினாமி பெயரில் சொத்துகள், 90 கிலோ தங்கம், 20 கோடி ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு ரூபாய் நோட்டுகள், துபாய் மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் 100 கோடி ரூபாய் மதிப்பில் முதலீடு செய்ததற்கான ஆவணங்கள் உள்ளிட்டவை கண்டறியப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. 

மேலும் கல்கி பகவானின் வாரிசுகளான கிருஷ்ணா, பிரீதா ஆகியோர் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்றும், கோப்புகளில் கையெழுத்திடவில்லை எனவும் வருமானவரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.