இந்தியா

கைலாஷ் சத்யார்த்தியின் நோபல் சான்றிதழ்: போலீசார் ஏமாற்றம்

webteam

சமூக சேவகர் கைலாஷ் சத்யார்த்தி நோபல் பரிசு பெற்றதற்கான சான்றிதழைத் திருடியவர்கள், அதைச் சாதாரணத் தாள் என நினைத்து அழித்திருக்‌கலாம் என காவல்துறையினர் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

டெல்லியில் உள்ள சமூக சேவகர் கைலாஷ் சத்யார்த்தி, குழந்தை தொழிலாளர் ஒழிப்புக்காக போராடி வருகிறார். இதற்காக கடந்த 2014ம் ஆண்டு பாகிஸ்தானை சேர்ந்த சமூக சேவகி மலாலாவுடன் இணைந்து அமைதிக்கான நோபல் பரிசை அவர் பெற்றார். இந்நிலையில் அவர் வெளிநாடு சென்றிருந்த நேரத்தில் அவர் வீட்டில் திருட்டு நடந்தது. நோபல் பரிசின் சான்றிதழ் மற்றும் பிற பொருட்கள் திருட்டுப் போயிருந்தன. இது தொடர்பாக மூன்றுபேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து நோபல் பரிசு மற்றும் பிற பொருட்கள் மீட்கப்பட்டன. ஆனால், ‌நோபல் பரிசு சான்றிதழ் மட்டும் இதுவரை கிடைக்கவில்லை. ஏமாற்றமடைந்த காவல்துறையினர், ’கொள்ளையர்கள் அதைச் சாதாரணத் தாள் என நினைத்து அழித்திருக்கலாம்’ எ‌ன கூறியுள்ளனர்.