இந்தியா

உ.பி அரசின் இலவச உணவகம் 9ஆம் தேதி தொடக்கம்

உ.பி அரசின் இலவச உணவகம் 9ஆம் தேதி தொடக்கம்

webteam

தமிழகத்தில் மலிவு விலையில் உணவளிக்கும் அம்மா உணவகத்தை போல உத்தரப்பிரதேசத்தில் அம்மாநில அரசு இலவச உணவகங்களை அமைக்க உள்ளது. சோதனை அடிப்படையிலான இத்திட்டம் ஆகஸ்ட் 9 முதல் செயல்பட உள்ளது.

மலிவு விலையில் உணவளிக்கும் ‘அம்மா உணகவகம்’ தமிழகத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்டது. இதே போன்று இந்திரா கேன்டீன், நம்ம உணவகம் என பல மாநிலங்களில் சலுகை விலையில் உணவு வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. 

இந்நிலையில்  உத்தரப்பிரதேசத்தில் ’கடவுளின் சமையலறை’ என பெயரிடப்படும் இந்த உணவகங்களில் 300 பேருக்கு இலவச உணவளிக்கப்பட உள்ளது. முதற்கட்டமாக சோதனை அடிப்படையில் சஹரான்பூரில் நாளை மறுதினம் இலவச உணவகம் தொடங்கப்பட உள்ளது. அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகஸ்ட் 9-ல் இந்த உணவகத்தை தொடங்கி வைக்கிறார்.