நந்தியாலா
நந்தியாலா pt web
இந்தியா

‘சேர்கள், கட்டைகள் என எதையும் விட்டுவைக்கவில்லை’ - அடிதடியில் முடிந்த கபடிப்போட்டி

PT WEB

"ஆடுடம் ஆந்திரா" என்ற பெயரில் ஆந்திர அரசு, மாநிலம் முழுவதும் விளையாட்டு போட்டிகள் நடத்தி வருகிறது. அந்தவகையில், நந்தியாலா பகுதியில் சேட்டன்கொத்தா, நாகத்தூர் ஆகிய ஊர்களின் அணிகளுக்கிடையே கபடி போட்டி நடைபெற்றது.

இதில் நாகத்தூர் அணி தோல்வி அடைந்த நிலையில், இரு அணிகளையும் சேர்ந்த வீரர்கள் முன்விரோதம் காரணமாக ஒருவரை ஒருவர் பிளாஸ்டிக் சேர்கள், கட்டைகள் ஆகியவற்றால் கடுமையாக தாக்கி கொண்டனர். இதையடுத்து அங்கு போட்டி நிர்வாகிகளாக இருந்த வருவாய் துறை அதிகாரிகள், அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இந்த மோதல் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நந்திகோட்கூர் மண்டல வளர்ச்சி அலுவலர் சோபாராணி கூறுகையில், “கபடி போட்டியில் ஐந்து புள்ளிகள் வித்தியாசத்தில் நாகத்தூர் அணி தோல்வியடைந்தது. போட்டிக்குப் பிறகு பதற்றம் உருவான நிலையில், அது இரு வீரர்களுக்கு இடையேயான மோதலுக்கு வழிவகுத்தது” என தெரிவித்தார்.

இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவிவருகிறது. இந்த தாக்குதலில் யாரும் காயம் அடையவில்லை என அலுவலர் சோபாராணி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.