இந்தியா

பிரியங்கா காந்தியின் உரையை சரியாக மொழிபெயர்த்து அசத்திய இளம் வழக்கறிஞர்!

பிரியங்கா காந்தியின் உரையை சரியாக மொழிபெயர்த்து அசத்திய இளம் வழக்கறிஞர்!

webteam

பிரியங்கா காந்தியின் உரையை மொழிபெயர்த்தது சவாலாகவே இருந்ததாக, வயநாடு பரப்புரையில் மொழிபெயர்ப்பாளராக இருந்த இளம் வழக்கறிஞர் ஜோதி தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலையொட்டி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தமிழகத்தில் பரப்புரை மேற்கொண்டபோது, அவரது பேச்சை தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் கே.வி. தங்கபாலு தமிழில் மொழிபெயர்த்தார். அவரது மொழிபெயர்ப்பு நேர்த்தியாக இல்லாததோடு, கிண்டலுக்கு உள்ளாகி, நெட்டிசன்களுக்கு தீனிபோட்டது. 

இதேபோல, கேரளாவில் ராகுலின் உரையை அம்மாநில மூத்த தலைவர் பி ஜே குரியனும், தப்பும் தவறுமாக மொழிபெயர்த்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்குத் தீர்வாக பத்தனம்புரம் என்ற இடத்தில் கடந்த 16-ஆம் தேதி நடைபெற்ற பரப்புரையில், ராகுலின் பேச்சை ஜோதி விஜயகுமார் என்ற இளம் வழக்கறிஞர் மொழிபெயர்த்தார். அவரது எளிய மொழிபெயர்ப்பு கேரள மக்களை கவர்ந்ததோடு, ராகுல் காந்திக்கு திருப்தியைத் தந்தது. 

இளம் வழக்கறிஞரான ஜோதி விஜயகுமார், கேரள காங்கிரசின் சமூக வலைத்தளப் பிரிவில் இயங்கி வருகிறார். இந்நிலையில், மனந்தவாடி என்ற இடத்தில் பிரியங்கா காந்தி பேசியபோது, ஜோதி விஜயகுமாரே மொழிபெயர்ப்பாளராக இருந்தார். இதுகுறித்து புதிய தலைமுறைக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், பிரியங்கா நீண்ட வாக்கியங்களைக் கையாண்டது தனக்கு சவாலாக இருந்ததாகக் குறிப்பிட்டார்.