உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளிட்ட 8 நீதிபதிகளுக்கு 5 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து நீதிபதி கர்ணன் தீர்ப்பளித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பிறப்பித்துள்ள உத்தரவில், உச்ச நீதிமன்றத்தின் 8 நீதிபதிகளுக்கு சிறைத் தண்டனை விதித்துள்ளார். இதனை வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவும் நீதிபதி கர்ணன் உத்தரவிட்டுள்ளார். முன்னதாக, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளிட்ட சக நீதிபதிகள் மீது ஊழல் புகார் கூறிய விவகாரத்தில், நீதிபதி கர்ணனுக்கு மனநிலை பரிசோதனை நடத்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். ஆனால், மனநிலை பரிசோதனைக்கு உட்பட நீதிபதி கர்ணன் மறுத்துவிட்டார்.