பிரதமர் நரேந்திர மோடி இன்று ஜம்மு காஷ்மீர் பயணம். உலகின் மிக உயரமான செனாப் ரயில் பாலத்தை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே வெடித்தது பகிரங்க மோதல். ஒருவருக்கொருவர் மாறி மாறி குற்றம்சாட்டுவதால் பரபரப்பு. தான் இருந்திருக்காவிட்டால் ட்ரம்பால் அதிபர் தேர்தலில் வென்றிருக்க முடியாது என எலான் மஸ்க் பதிவு. ட்ரம்பிடம் நன்றி உணர்வே இல்லை எனவும் காட்டம்.
பெங்களூரு மாநகர காவல் ஆணையர் உள்பட 5 உயரதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்து முதல்வர் சித்தராமையா நடவடிக்கை. 11 பேர் உயிரிழந்த விவகாரத்தை விசாரிக்க முன்னாள் நீதிபதி குன்ஹா தலைமையில் ஒரு நபர் ஆணையத்தை அமைத்து உத்தரவு.
பிளாஸ்டிக் மாசுபாட்டை ஒழிக்க வெளியே கிளம்பும்போது துணிப்பை, தண்ணீர் பாட்டிலை எடுத்துச்செல்க. உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்.
மாநிலங்களவைத் தேர்தலை முன்னிட்டு இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன். அதிமுக வேட்பாளர்களும் மனுத்தாக்கல் செய்ய இருப்பதாக கட்சி தலைமை அறிவிப்பு.
தமிழகத்தில் 2 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும். வெப்பம் காரணமாக அசௌகரியம் ஏற்படலாம் எனவும் வானிலை ஆய்வு மையம் தகவல்.
தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 11 இடங்களில் சதம் அடித்தது வெயில் . அதிகபட்சமாக மதுரை விமான நிலைய பகுதியில் 104 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவு.
ஐஐடி செல்லும் பழங்குடியின மாணவி ராஜேஷ்வரியின் சாதனைக்கு சல்யூட் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு. மாணவியின் முழு கல்விச் செலவையும் அரசே ஏற்கும் என்றும் உறுதி.
தந்தை இறந்தபோதிலும், அவரது இடத்தில் இருந்து அண்ணன் படிக்க வைத்ததாக ஐஐடி மாணவி ராஜேஷ்வரி நெகிழ்ச்சி. தந்தையின் கனவை நனவாக்கி இருப்பதாகவும் புதிய தலைமுறைக்கு அளித்த பேட்டியில் மாணவி பெருமிதம்.
விழுப்புரம் தைலாபுரம் இல்லத்தில் ராமதாசை சந்தித்து பேசிய அன்புமணி. கருத்துவேறுபாடு, மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் சந்திப்பு நடந்ததாக தகவல்.
பாமக நிறுவனர் ராமதாசை சந்தித்து பேசிய ஆடிட்டர் குருமூர்த்தி மற்றும் சைதை துரைசாமி. அமித்ஷா தமிழகம் வரும்நிலையில், தந்தை-மகனை சமாதானம் செய்யும் முயற்சி எனத் தகவல்.
கூட்டணியில் இணைய தவெக தலைவர் விஜய்க்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மீண்டும் அழைப்பு. இனிமேல்தான் பதில் வரும் என நினைப்பதாகவும் பேட்டி.
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு கடலூர் மாவட்டம் வேப்பூரில் விடிய விடிய நடைபெற்ற ஆட்டுச்சந்தை. அதிகளவு ஆடுகள் விற்பனையானதால் வியாபாரிகள் மகிழ்ச்சி.
தக் லைஃப் படத்தில் முத்த மழை பாடல் இடம்பெறாததால் ரசிகர்கள் ஏமாற்றம். பாடகிகள் தீ சின்மயி வெர்சன்கள் வைரலான நிலையிலும் பாடல் தவிர்ப்பு.