HEADLINES pt
இந்தியா

HEADLINES|ஈரான் உச்ச தலைவர் காமேனியின் பேச்சு முதல் கனமழையால் வீடுகளுக்குள் புகுந்த மழைநீர் வரை!

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, ஈரான் உச்ச தலைவர் காமேனியின் பேச்சு முதல் கனமழையால் வீடுகளுக்குள் புகுந்த மழைநீர் வரை உள்ளிட்டவற்றை விவரிக்கிறது.

PT WEB
  • சீனாவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவிப்பு. அடுத்த ஒப்பந்தம் இந்தியாவுடன் இருக்கலாம் என சூசகம்.

  • கத்தாரில் ராணுவ தளத்தை அழித்து அமெரிக்காவின் முகத்தில் அறைந்து விட்டோம் என ஈரான் உச்ச தலைவர் காமேனி பேச்சு.

  • எந்த அந்நிய மொழிக்கும் எதிர்ப்பு இருக்கக்கூடாது என மத்திய அமைச்சர் அமித் ஷா கருத்து. ஆங்கிலம் பேசுவோர் வெட்கப்பட வேண்டிய காலம் வரும் என பேசியிருந்தது சர்ச்சையான நிலையில் விளக்கம்.

  • மஹாராஷ்டிர தேர்தல் முறைகேடு புகார்கள் பற்றி தேர்தல் ஆணையத்துடன் விவாதிக்கத் தயார் என காங்கிரஸ் அறிவிப்பு. விவாதத்திற்கு முன் வாக்காளர் பட்டியலின் நகல், கேமரா பதிவுகளை வழங்கவும் கோரிக்கை.

  • அண்ணாவை அவமதிப்பதை அதிமுக வேடிக்கை பார்த்ததாக முதல்வர் மு.க. ஸ்டாலின் சாடல். கட்சியை அடகு வைத்தவர்கள், தற்போது தமிழ்நாட்டை அடகு வைக்க பார்ப்பதாகவும் விமர்சனம்.

  • அண்ணாவின் கொள்கைகளுக்கு மாறாக திமுக செயல்படுகிறது என பழனிசாமி விமர்சனம். எங்கள் குருதியில் குடியிருக்கும் அண்ணாவை விட்டுக்கொடுக்க மாட்டோம் என்றும் பதிவு.

  • தமிழகத்தில் 2026இல் பாஜக கூட்டணி ஆட்சி அமையும் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் உறுதி.

  • பாஜகவுடன் கூட்டணி சேர்ந்துள்ள அதிமுக எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வேண்டுகோள்.

  • சர்வதேச விண்வெளி நிலையத்தில் விவசாயம் உள்ளிட்ட ஆய்வுகளில் ஈடுபடும் சுபான்ஷு சுக்லா. விண்வெளியில் இருந்து பூமியைப் பார்க்கும் பாக்கியசாலிகளில் நானும் ஒருவன் என உருக்கம்.

  • ரயில் கட்டணத்தை உயர்த்துவது குறித்து பிரதமர் மோடிதான் முடிவெடுப்பார் என மத்திய இணை அமைச்சர் சோமண்ணா புதிய தலைமுறைக்கு பிரத்யேக பேட்டி.

  • பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியீடு. உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் பட்டியலை வெளியிடுகிறார்.

  • கர்நாடக அணைகளில் இருந்து விநாடிக்கு 80 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 113.05 அடியாக உயர்வு.

  • பொள்ளாச்சி அருகே கனமழையால் வீடுகளுக்குள் புகுந்த மழைநீர். நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்.

  • கேரளாவில் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி அருகே காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய யானை. நீண்ட நேரத்துக்கு பின் கரையை அடைந்தது.

  • திருவள்ளூர் அருகே சினிமா பாணியில் காரில் தொங்கியபடி ரவுடியை பிடிக்க முயன்ற காவலர். ரவுடி தள்ளிவிட்டதில் காரில் இருந்து கீழே விழுந்த அதிர்ச்சி காட்சிகள்.

  • மதுரை ஆதீனம் மீது சைபர் கிரைம் காவல் துறையினர் வழக்குப்பதிவு. தம்மை கொல்ல முயன்றதாக கூறிய புகாரில் உண்மையில்லை என தெரியவந்ததால் நடவடிக்கை.