HEADLINES pt
இந்தியா

HEADLINES|ஈரானில் சிக்கிய தமிழக மீனவர்கள் முதல் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அதிருப்தி வரை!

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, ஈரானில் சிக்கிய தமிழக மீனவர்கள் முதல் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அதிருப்தி வரை உள்ளிட்டவற்றை விவரிக்கிறது.

PT WEB
  • ஈரானில் சிக்கி இருக்கும் 651 தமிழக மீனவர்கள் பாதுகாப்பாக இந்தியா அழைத்து வர வேண்டும் என வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்.

  • வேலூரில் முதல்வர் திறக்க இருப்பது மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையா? இல்லை விளம்பரக் கட்டடமா? என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி.100 சதவிகிதம் பணிகள் நிறைவடைந்த பிறகே திறக்கப்படுவதாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் விளக்கம்.

  • பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டாவுடன் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் சந்திப்பு. கூட்டணியில் பாமக, தேமுதிகவை சேர்ப்பது குறித்து ஆலோசித்ததாக தகவல்.

  • விசிக 234 தொகுதிகளுக்கு இணையானது; தகுதியானது. டீ, பன் கொடுத்து ஏமாற்றலாம் என கணக்குப் போடாதீர்கள் என திருமாவளவன் பேச்சு.

  • அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக விடுதியில் இடநெருக்கடி, கழிவறை போன்ற வசதிகள் பற்றாக்குறை. நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்ததால் மாணவிகளின் 10 மணி நேர போராட்டம் முடிவுக்கு வந்தது.

  • சென்னையில் புறநகர் ரயிலில் ஆபத்தான முறையில் பயணிக்கும் இளைஞர்கள். படிக்கட்டுக்களில் நின்று கொண்டு நடைமேடையில் கால்களை தேய்த்தபடி செல்லும் வீடியோ வைரல்.

  • கொக்கைன் போதைப் பொருளைப் பயன்படுத்தியதால், உரிய ஆதாரங்களுடன் நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை அறிக்கை.. நடிகர் கிருஷ்ணாவுக்கும் சம்மன் அனுப்பி நுங்கம்பாக்கம் போலீஸார் நடவடிக்கை.

  • திருமாவளவனிடம் இருந்து பெற்ற தொகையில் 500 ரூபாயை மட்டும் எடுத்து ஃப்ரேம் போட்டு வைத்து கொள்ளப்போகிறேன். விசிக விருது வழங்கும் விழாவில் நடிகர் சத்யராஜ் பேச்சு.

  • தக் லைஃப் படம் போதிய வரவேற்பு பெறாததற்காக ரசிகர்களிடம் மணிரத்னம் மன்னிப்பு கேட்டாரா? சமூக வலைதளங்களில் பரவும் தகவல் பொய்யானது என்று புதிய தலைமுறைக்கு மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் விளக்கம்.

  • வரும் 27, 28ஆம் தேதிகளில் கோவை, நீலகிரியில் கனமழை பெய்ய வாய்ப்பு. தமிழகம், புதுச்சேரியில் 30ஆம் தேதி வரை மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் கணிப்பு.

  • போர் நிறுத்த உடன்படிக்கைக்கு பிறகும் தாக்குதல் நடத்துவதா? இஸ்ரேல் - ஈரான் நாடுகள் மீது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அதிருப்தி.

  • இந்தியாவுடனான முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி. பென் டக்கெட், க்ராலி, ஜோ ரூட் சிறப்பான ஆட்டத்தால் வாகை சூடியது.