கத்தார், சிரியா, ஈராக்கில் உள்ள அமெரிக்காவின் ராணுவ தளங்கள் மீது ஈரான் அதிரடி தாக்குதல். சரமாரியாக ஏவுகணைகளை வீசியதால் பதற்றம்.
அமெரிக்காவுக்கு எதிரான தாக்குதலுக்கு ஆபரேஷன் பஷாரத் அல்- பாத் என பெயரிட்ட ஈரான். அமெரிக்க இலக்குகள் துல்லியமாக தாக்கப்பட்டதாக தகவல்.
ஈரானின் தாக்குதலையடுத்து மத்திய கிழக்கு நாடுகளில் முன்னெச்சரிக்கையாக வான்வெளிகள் மூடல். கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், எகிப்து, குவைத், ஜோர்டான், லெபனான், சவுதி அரேபியா நாடுகள் வான்பரப்பை மூடின.
மத்திய கிழக்கில் அதிகளவிலான ராணுவப் படையை நிறுத்திய அமெரிக்கா. முன்கூட்டியே தகவல் தெரிவித்து தாக்குதல் நடத்தியதற்காக ஈரானுக்கு நன்றி தெரிவித்த ட்ரம்ப்.
இப்போதும் கூட அமைதி மற்றும் நல்லிணக்கத்தை ஈரான் தொடர முடியும். ஈரான் தாக்குதல் நடத்திய நிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நம்பிக்கை.
அமெரிக்காவின் ராணுவத் தளங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ள ஈரானுக்கு ஐக்கிய அரபு அமீரகம் கண்டனம். ராணுவ நடவடிக்கைகளைத் தவிர்க்குமாறு ஈராக் வலியுறுத்தல்.
அமெரிக்கா உள்ளிட்ட மேற்காசிய நாடுகளுக்கான விமான சேவை தற்காலிகமாக நிறுத்தம். போர் பதற்றம் நிலவுவதால் ஏர் இந்தியா நிறுவனம் அறிவிப்பு.
போதைப்பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நடிகர் ஸ்ரீகாந்த். ஜுலை 7ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு.
நீட் தேர்வில் பணம்தான் விளையாடுவதாக முதல்வர் ஸ்டாலின் பதிவு. ஆர்எஸ்எஸ், பாஜக மாநாடுகளில் காட்சிப் பொருளாக உட்காரும் அதிமுகவினருக்கு இவற்றை எதிர்க்க நேரமில்லை என்றும் விமர்சனம்.
முருக பக்தர்கள் மாநாட்டில் பெரியார், அண்ணா குறித்த வீடியோவுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்து அதிமுக ஐடி விங் அறிக்கை. மாநாட்டில் தீர்மானங்களையோ, உறுதிமொழிகளையோ ஏற்கவில்லை என்றும் திட்டவட்டம்.
5 மாநில இடைத்தேர்தலில் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அமோக வெற்றி. குஜராத்தில் ஒரே ஒரு தொகுதியை மட்டும் கைப்பற்றிய பாஜக.
ஈரான் மீது போர் தொடுத்ததற்காக அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கு எதிர்ப்பு. அமெரிக்கா, கனடா, ஜப்பான், பாகிஸ்தான் என பல நாடுகளில் போராட்டம்.
ஈரானுக்கு தேவையான உதவிகளை செய்துதரத் தயார் என ரஷ்யா அறிவிப்பு. அமெரிக்கா, இஸ்ரேல் அடுத்தடுத்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில் புடின் முக்கிய ஆலோசனை.
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 2ஆவது இன்னிங்ஸிலும் சதமடித்து அசத்திய ரிஷப் பந்த். கே.எல்.ராகுலும் சதம் விளாசி அசத்தல் முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணிக்கு 371 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்தியா.