Headlines pt
இந்தியா

Headlines|நிம்பஸ் வகை கொரோனா தொற்று அதிகரிப்பு முதல் சர்வதேச யோகா தினம் வரை!

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, நிம்பஸ் வகை கொரோனா தொற்று அதிகரிப்பு முதல் சர்வதேச யோகா தினம் வரை உள்ளிட்டவற்றை விவரிக்கிறது.

PT WEB
  • இஸ்ரேலின் வெய்ஸ்மேன் அறிவியல் நிறுவனம் மீது பாய்ந்த ஈரான் ஏவுகணைகள். தங்கள் நாட்டு அணு விஞ்ஞானிகள் கொல்லப்பட்டதை அடுத்து இஸ்ரேல் விஞ்ஞானிகளுக்கு குறி.

  • ஈரான்-இஸ்ரேல் மோதல் தீவிரமடைவது, யாராலும் கட்டுப்படுத்த முடியாத தீயை மூட்டக்கூடும் என ஐ.நா எச்சரிக்கை. அமைதிக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் என இருநாடுகளுக்கும் ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் அழைப்பு.

  • ஈரான் அணு ஆயுதத்தை உருவாக்குவதற்கான எந்த ஆதாரமும் இல்லை என அமெரிக்க உளவுத்துறை இயக்குநர் துளசி கப்பார்ட் கூறிய விவகாரம். உளவுத்துறை தகவல் தவறானது என அதிபர் ட்ரம்ப் பதில்.

  • ஈரானில் இருந்து தாயகம் அழைத்துவரப்பட்ட 190 மாணவர்கள் உட்பட 290 இந்தியர்கள். தனி விமானம் மூலம் நள்ளிரவு டெல்லி வந்தவர்களை வரவேற்ற வெளியுறவுத்துறை அதிகாரிகள்.

  • 11ஆவது சர்வதேச யோகா தினம் இன்று கொண்டாட்டம். விசாகப்பட்டினத்தில் நடைபெறும் மிக பிரம்மாண்டமான யோகா நிகழ்ச்சியில் பங்கேற்கிறார் பிரதமர் மோடி.

  • 80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட வள்ளுவர் கோட்டம். பொதுமக்களின் பார்வைக்கு இன்று திறந்து வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.

  • திண்டுக்கல்லில் இந்து முன்னணி மற்றும் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இடையே மோதல். மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த 8 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைப்பு.

  • வால்பாறையில் வீட்டின் அருகே நின்று கொண்டிருந்த சிறுமியை தாக்கி இழுத்துச் சென்ற சிறுத்தை. சிறுமியை தேடும் பணியில் வனத் துறையினர் தீவிரம்.

  • குலசேகரத்தில் காதலி வீட்டில் காதலன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் முதற்கட்டமாக சந்தேக மரணம் என வழக்குப்பதிவு. விசாரணை நடைபெற்று வருவதால், வழக்கு குறித்து தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என மாவட்ட எஸ்பி பேட்டி.

  • பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது நண்பன் பரிசாக வழங்கிய நாட்டு வெடிகுண்டை வீசி வெடிக்கச் செய்து ரீல்ஸ் பதிவிட்ட இளைஞர் கைது. காலில் மாவுக்கட்டு போடப்பட்ட நிலையில் சிறையில் அடைப்பு.

  • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை. பலத்த காற்று வீசியதால் தென்னை மரம் விழுந்து ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு.

  • பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க கணவரின் கையெழுத்தை மனைவி பெற வேண்டிய அவசியம் இல்லை என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

  • உலகளவில் நிம்பஸ் வகை கொரோனா பரவலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரிப்பு. ரேஸர் பிளேடை விழுங்குவது போல் வலியை அளிப்பதாக பாதிக்கப்பட்டவர்கள் தகவல்.

  • இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் 359 ரன்கள் குவித்த இந்தியா. கேப்டனாக களமிறங்கிய முதல் டெஸ்ட்டிலேயே சதம் விளாசிய சுப்மன் கில்.

  • பாரிஸ் டைமண்ட் லீக் ஈட்டி எறிதலில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா அசத்தல் வெற்றி. 88 புள்ளி 16 மீட்டர் தூரம் ஈட்டியெறிந்து முதலிடம் .