HEADLINES PT
இந்தியா

HEADLINES | போர் நிறுத்தம் குறித்து மீண்டும் பேசிய ட்ரம்ப் முதல் இஸ்ரேல் - ஈரான் மோதல் வரை..!

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, போர் நிறுத்தம் குறித்து மீண்டும் பேசிய ட்ரம்ப் முதல் ஆறாவது நாளாக தொடரும் இஸ்ரேல் - ஈரான் மோதல் வரை உள்ளிட்டவற்றை விவரிக்கிறது.

PT WEB
  • இஸ்ரேல் - ஈரான் இடையே ஆறாவது நாளாக மோதல். ஈரான் மீது தாக்குதல் நடத்துவது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பதில்.

  • அமெரிக்க அதிபர் ட்ரம்புடன், பாகிஸ்தான் ராணுவ தளபதி ஆசிம் முனீர் சந்திப்பு. இந்தியாவுடன் போரை தொடராமல் இருந்ததற்கு, முனீரிடம் நன்றி தெரிவித்ததாக ட்ரம்ப் விளக்கம்.

  • பாகிஸ்தான் கேட்டுக் கொண்டதால்தான் போரை நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பிடம் பிரதமர் மோடி விளக்கம். 3ஆம் தரப்பு மத்தியஸ்தத்தை ஒரு போதும் ஏற்க மாட்டோம் என்றும் திட்டவட்டம்.

  • போர் நிறுத்தம் குறித்து ட்ரம்ப்பிடம் கூறியதை எதிர்க்கட்சிகளிடம் பிரதமர் மோடி கூறாதது ஏன் என காங்கிரஸ் கேள்வி. சர்ச்சைக்குரிய விஷயம் குறித்து பேச 37 நாட்களானது ஏன் என்றும் வினா.

  • இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போரை தாமே நிறுத்தியதாக ட்ரம்ப் மீண்டும் திட்டவட்டம். இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்ய உள்ளதாகவும் பேட்டி.

  • குரோஷியா பிரதமர் ஆண்ட்ரெஜூடன் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு. பிரச்சினைகளுக்கு போர் ஒருபோதும் தீர்வாகாது என பேச்சு.

  • ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்துக்கு ஆள் சேர்த்த புகார். தமிழகத்தில் மேலும் 4 பேரை கைது செய்தது தேசிய புலனாய்வு முகமை.

  • அதிமுகவுடன் கூட்டணி வைப்பதில் பிரச்சினை இல்லை என விசிக தலைவர் திருமாவளவன் கருத்து. பாஜக இருப்பதால் அந்த கூட்டணியில் சேர முடியாது என்றும் பேச்சு.

  • சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முதல்வர் ஸ்டாலினுக்கு பயம் ஏன்? என பாமக தலைவர் அன்புமணி கேள்வி.

  • 'ஒற்றை சிறகு ஓவியா' புத்தகத்துக்காக விஷ்ணுபுரம் சரவணனுக்கு பால சாகித்ய புரஸ்கார் விருது அறிவிப்பு. கூத்தொன்று கூடிற்று சிறுகதைக்காக எழுத்தாளர் லட்சுமிஹர்ருக்கு யுவ புரஸ்கார் விருது.

  • சென்னை திருவிக நகரில் லாரி மோதிய விபத்தில் 10 வயது சிறுமி உயிரிழந்த விவகாரம். பீக் ஹவர்ஸில் தண்ணீர் லாரி, பொதுசாலையில் சென்றதை தடுக்க தவறியதாகக் கூறி போக்குவரத்து ஆய்வாளர் சஸ்பெண்ட்.

  • வாணியம்பாடியில் தனியார் மருத்துவமனையில் இருதரப்பினர் இடையே மோதல். 5 பேரை கைது செய்து காவல் துறையினர் விசாரணை.

  • ஆபரேஷன் சிந்து நடவடிக்கை மூலம் ஈரானில் இருந்து இந்தியர்களை மீட்கும் மத்திய அரசு. முதற்கட்டமாக 110 பேர் டெல்லி வந்தடைந்தனர்.

  • வெளிநாடுகளுக்கான விமான சேவையை 15 விழுக்காடு குறைத்த ஏர் இந்தியா. சிறந்த செயல் திறனை உறுதி செய்வதற்கான நடவடிக்கை என விளக்கம்.

  • இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் நான்காவது வரிசையில் ஷுப்மன் கில் களமிறங்குவார். இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ரிஷப் பந்த் தகவல் .