ஈரானின் ஆட்சித் தலைவர் இருக்கும் இடம் தெரியும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தகவல். நிபந்தனையின்றி சரணடைய வேண்டும் என்று வலியுறுத்தல். ஈரானின் வான்வெளியை முழுமையாக கட்டுப்படுத்திவிட்டதாகவும் ட்ரம்ப் அறிவிப்பு.
மத்திய கிழக்கு பகுதிக்கு போர் விமானங்களை அனுப்பி பாதுகாப்பு நடவடிக்கை. இஸ்ரேலின் உளவு அமைப்பு தலைமை அலுவலகத்தின் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாக தகவல்.
ஈரானிடம் அணு ஆயுதம் இருக்கக்கூடாது என்பதில் அமெரிக்கா உறுதியாக இருப்பதாக வெள்ளை மாளிகை அறிக்கை.
கனடாவில் ஜி7 மாநாட்டில் பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு...
ஜெர்மனி, தென் கொரியா, தென் ஆப்ரிக்கா தலைவர்களை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை.
சேலம் அருகே தண்டவாளத்தில் இரும்புத்துண்டு வைத்து ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க சதி. 10 அடி நீளமுள்ள இரும்புத்துண்டின் மீது ஏறி அதிர்ஷ்டவசமாக ரயில் நின்றதால் பெரும் விபத்து தவிர்ப்பு...
சிறுவன் கடத்தல் வழக்கில் ஏடிஜிபி ஜெயராம் 20 மணி நேர விசாரணைக்கு பிறகு விடுவிப்பு. பூவை ஜெகன்மூர்த்தி எம்எல்ஏவிடம் 10 மணி நேரம் போலீஸார் விசாரணை.
தமிழகத்தில் மாம்பழக்கூழ் உற்பத்தி செய்யும் ஆலைகள் விவசாயிகளிடம் மாங்கனிகளை கொள்முதல் செய்ய உத்தரவு. புதிய தலைமுறை பெருஞ்செய்தியாக வெளியிட்ட நிலையில் தமிழக அரசு நடவடிக்கை.
கீழடி அகழாய்வு மேற்கொண்ட அமர்நாத் ராமகிருஷ்ணா நொய்டாவுக்கு பணியிடமாற்றம். கீழடி விவகாரத்தில் மதுரை விரகனூரில் இன்று நடைபெறும் கண்டன பேரணியில் பங்கேற்க முதல்வர் ஸ்டாலின் அழைப்பு.
சென்னை விமான நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் லேசர் ஒளியை பயன்படுத்தினால் குற்றச் செயலாக கருதப்படும். சென்னை விமான நிலைய நிர்வாகம் எச்சரிக்கை.
17 கோடி ரூபாய் சொத்துகளை மோசடி செய்ததாக வழக்கு. அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதனின் மகன் கைது.
சிவகங்கை அருகே கல்குவாரியில் பாறை சரிந்து 6 பேர் உயிரிழந்த சம்பவம். உரிமம் காலாவதியான பிறகும் கல்குவாரியை இயக்கி வந்ததால் உரிமையாளருக்கு 91 கோடி ரூபாய் அபராதம்.
தலைநகர் டெல்லியில் வெளுத்து வாங்கிய கனமழை. சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்ததால் வாகன ஓட்டிகள் அவதி.
அகமதாபாத்தில் விமானம் விபத்துக்குள்ளானது தொடர்பான புதிய வீடியோ வெளியானது. மருத்துவக்கல்லூரி கட்டடத்தின் இருந்து கீழே குதித்து உயிர் தப்பிய மாணாக்கர்.