இஸ்ரேல் - ஈரான் இடையே தீவிரமடைந்த மோதல். தெஹ்ரானில் இஸ்ரேலின் ஏவுகணைத் தாக்குதலால் பற்றி எரிந்த எண்ணெய் கிடங்கு.
இஸ்ரேல்- ஈரான் போர் முடிவுக்கு வர வேண்டும் என அமெரிக்க அதிபர் கருத்து. ரஷ்ய அதிபர் புதினும் அதே நிலைப்பாட்டில் உள்ளதாக சமூக வலைதளத்தில் ட்ரம்ப் பதிவு.
நீலகிரி மாவட்டத்திற்கு இன்றும் அதிகனமழைக்கான ரெட் அலர்ட்.கோவை, நெல்லை, தேனி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை.
டெல்டா பாசனத்திற்காக கல்லணையில் இருந்து இன்று தண்ணீரை திறந்து வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். நீர் திறப்பையொட்டி வண்ணம் பூசப்பட்டு புதுப்பொலிவுடன் காட்சியளிக்கும் கல்லணை.
மதச்சார்பின்மை காப்போம்" என்ற தலைப்பில் திருச்சியில் விசிகவினர் பிரம்மாண்ட பேரணி. அம்பேத்கர் போன்று உடையணிந்து பேரணியில் பங்கேற்ற திருமாவளவன், தொண்டர்கள்.
ஆளுங்கட்சியுடன் கூட்டணியில் இருந்தும் வி.சி.க.வின் பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக திருமாவளவன் பேச்சு. நெருக்கடிகளை தாங்கிக் கொண்டு களத்தில் நிற்கும் இயக்கம் விசிக என்றும் ஆவேசம்.
திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கை தமிழில் நடத்தாவிட்டால், கோயிலை சுற்றி முற்றுகையிடுவோம். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எச்சரிக்கை.
நிறைவடைந்தது 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம். நள்ளிரவு முதல் உற்சாகமாக கடலுக்குச் சென்ற விசைப்படகு மீனவர்கள்.
அகமதாபாத் விமான விபத்து குறித்து 3 மாதத்தில் விசாரணை அறிக்கை வெளியிடப்படும் என மத்திய அமைச்சர் ராம்மோகன் நாயுடு பேட்டி. கருப்பு பெட்டி மூலம் உண்மைகள் தெரியவரும் என்றும் நம்பிக்கை.
அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு கூடுதலாக தலா 25 லட்ச ரூபாய் நிதியுதவி. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ஒரு கோடியுடன் சேர்த்து 25 லட்ச ரூபாய் வழங்கப்படும் என்று ஏர் இந்தியா அறிவிப்பு.
ஜெர்மனியில் நடக்கும் உலகக் கோப்பை துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் இந்தியாவுக்கு 2ஆவது தங்கப் பதக்கம். 10 மீட்டர் ஏர் ரைபிள் கலப்பு இரட்டையர் பிரிவில் ஆர்யா, அர்ஜூன் பபுத்தா முதலிடம் பிடித்து அசத்தல்.
வெற்றிக் கொண்டாட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க 3 பேர் கொண்ட குழு அமைப்பு. 15 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என பிசிசிஐ அறிவிப்பு.
தக் லைஃப் திரைப்படத்தில் இடம்பெறாத "முத்த மழை” பாடலின் வீடியோவை வெளியிட்டது படக்குழு. யூடியூப்பில் வெளியான சில மணி நேரங்களில் 14 லட்சம் பார்வைகளை கடந்தது.