குஜராத்தில் பாலம் இடிந்து விழுந்ததில் சிலர் படுகாயமடைந்தனர். ஏராளமான கார்கள் இடிபாடுகளில் சிக்கின.
குஜராத் மாநிலம் ஜுனாகத் அருகில் உள்ளது மலனாகா கிராமம். இங்குள்ள பாலத்தில் எப்போதும் வாகனங்கள் சென்று கொண்டிருக்கும். பிசியான இந்த பாலம் நேற்று திடீரென இடிந்து விழுந்து. அப்போது பாலத்தில் சென்றுகொண்டிருந்த கார்கள், தடுமாறி விழுந்து இடிபாடுகளில் சிக்கிக்கொண்டன. காரில் இருந்தவர்கள் படுகாயமடைந்தனர்.
பல கார்கள் சேதமடைந்தன. அந்தப் பகுதியில் உள்ளவர்கள் உடனடியாக செயல்பட்டு, காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கடும் மழை காரணமாக இந்த பாலம் இடிந்து விழுந்ததாகக் கூறப்படுகிறது. பாலம் இடிந்து விழுந்ததன் காரணமாக ஜுனாகத்தில் இருந்து முண்ட்ரா செல்லும் சாலையில் போக்குவரத்து தடைபட்டுள்ளது.