HEADLINES pt
இந்தியா

HEADLINES|நடிகர் ஸ்ரீகாந்திற்கு நிபந்தனை ஜாமின் முதல் ஏமனில் இந்திய செவிலியருக்கு மரண தண்டனை வரை!

இன்றைய காலை தலைப்பு செய்தியானது, நடிகர் ஸ்ரீகாந்திற்கு நிபந்தனை ஜாமின் முதல் ஏமனில் இந்திய செவிலியருக்கு மரண தண்டனை வரை உள்ளிட்டவற்றை விவரிக்கிறது.

PT WEB
  • பிரேசில் அதிபர் லூயிஸை சந்தித்து பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை. பயங்கரவாதம் சார்ந்த விவகாரத்தில் இரட்டை நிலைப்பாடு இருக்கக் கூடாது என்று பேச்சு.

  • பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தை கண்டித்து எதிர்க்கட்சிகள் இன்று போராட்டம். காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி பங்கேற்கிறார்.

  • மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காகவே திமுக அரசு மகளிர் உரிமைத் தொகையை வழங்குகிறது என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி விமர்சனம்.

  • பாஜகவை விட தமிழகத்துக்கு அதிக துரோகம் செய்வது அதிமுகதான் என திமுக எம்.பி கனிமொழி குற்றச்சாட்டு.

  • சென்னையில் வரும் 18ஆம் தேதி திமுக எம்.பி.க்கள் கூட்டம் நடைபெறும் என கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு.

  • நாடு முழுவதும் இன்று மத்திய தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு அழைப்பு. அரசு ஊழியர்கள் பங்கேற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை.

  • கடலூர் செம்மங்குப்பம் ரயில் விபத்து தொடர்பாக கேட் கீப்பர் பங்கஜ் சர்மா பணியிடை நீக்கம். காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட நிலையில் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு.

  • ரயில்வே கேட் விவகாரத்தில் ரயில்வே வெளியிட்ட முரண்பட்ட அறிக்கையால் குழப்பம். கேட் கீப்பர் அலட்சியமே விபத்துக்கு காரணமென பொது மேலாளர் ஆர்.என். சிங் பேட்டி.

  • திருப்புவனம் கோயில் ஊழியர் அஜித்குமார் கொலை வழக்கு. விசாரணையை ஒரு வாரத்தில் தொடங்க சிபிஐக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு.

  • போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமின். வழக்கின் புலன் விசாரணை அதிகாரி முன்பு தினமும் ஆஜராக வேண்டும் என உயர் நீதிமன்றம் நிபந்தனை.

  • தமிழகத்தில் வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.

  • மத்திய நீர்வளத்துறை அமைச்சர் சி.ஆர். பாட்டீலுடன் கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் சந்திப்பு. மேகதாது அணைக்கு அனுமதி வழங்க வலியுறுத்தல்.

  • இந்திய விமானப்படையின் ரஃபேல் போர் விமானம் பாகிஸ்தானால் சுட்டு வீழ்த்தப்பட்டதா?. பிரான்ஸின் டசால்ட் ஏவியேஷன் நிறுவனம் திட்டவட்டமாக மறுப்பு..

  • ஏமனில் இந்திய செவிலியர் நிமிஷாவுக்கு வரும் 16ஆம் தேதி மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளதாக அறிவிப்பு. ஏமன் அரசுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தும் மத்திய அரசு.

  • விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் அரையிறுதிக்கு முன்னேறினார் ஸ்பெயின் வீரர் அல்காரஸ். மகளிர் பிரிவில் பெலாரஸ் வீராங்கனை சபலெங்கா அரையிறுதிக்கு முன்னேற்றம்.