HEADLINES pt
இந்தியா

HEADLINES|அஜித் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் கூறிய விஜய் முதல் அரசுமுறைப்பயணம் சென்ற பிரதமர் வரை!

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, அஜித் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் கூறிய விஜய் முதல் அரசுமுறைப்பயணம் சென்ற பிரதமர் வரை உள்ளிட்டவற்றை விவரிக்கிறது.

PT WEB
  • 60 நாள் போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்த ட்ரம்ப். காஸாவில் முழுமையாக தாக்குதல் நிறுத்தப்பட்டால் ஒப்பந்தத்திற்கு தயார் என ஹமாஸ் அறிவிப்பு.

  • அரசுமுறைப் பயணமாக மேற்கு ஆப்ரிக்க நாடான கானா சென்றார் பிரதமர் மோடி. அந்நாட்டின் உயரிய விருதை வழங்கி கவுரவித்தார் அதிபர் மஹாமா.

  • நேஷனல் ஹெரால்டு வழக்கில் 2 ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு. சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது அமலாக்கத் துறை குற்றச்சாட்டு.

  • அஜித்குமார் கொலை வழக்கு தொடர்பாக நீதி விசாரணையை தொடங்கிய மதுரை மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால். கோயில் நிர்வாகிகள், சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் உள்ளிட்டோரிடம் 11 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை.

  • காவல்துறையினரால் கொலை செய்யப்பட்ட இளைஞர் அஜித்குமாரின் தம்பிக்கு ஆவின் நிறுவனத்தில் டெக்னீசியன் பணி. 5 லட்சம் ரூபாய் இழப்பீடு, இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கி அமைச்சர் பெரியகருப்பன் ஆறுதல்.

  • இளைஞர் கொலை வழக்கில் நீதி கிடைக்கும் வரை அதிமுக துணை நிற்கும் என காவல் விசாரணையில் அடித்துக் கொல்லப்பட்ட அஜித்குமாரின் குடும்பத்தினருக்கு பழனிசாமி ஆறுதல்.

  • சாத்தான் வேதம் ஓதுவதுபோல பழனிசாமி பேசி இருப்பதாக ஆர்.எஸ். பாரதி விமர்சனம். சாத்தான்குளம் சம்பவத்தில் இருவருமே உடல்நலக்குறைவால் இறந்தார்கள் என்று பேசியபோது நீதி எங்கே போனது என்றும் கேள்வி.

  • காவல் துறையால் கொல்லப்பட்ட இளைஞர் அஜித் குடும்பத்தை நேரில் சந்தித்து தவெக தலைவர் விஜய் ஆறுதல். இளைஞரின் குடும்பத்துக்கு நிதி உதவியும் வழங்கினார்.

  • இளைஞர் அஜித் மீது புகாரளித்த நிகிதா, லட்சக்கணக்கில் பண மோசடி செய்ததாக 2011இல் வழக்குப்பதிவு. துணை முதல்வரின் உதவியாளரைத் தங்களுக்குத் தெரியும் என மோசடியில் ஈடுபட்டதாக புகார்.

  • தமிழக காவல் துறையில் உள்ள அங்கீகரிக்கப்படாத தனிப்படைகள் கலைப்பு. இளைஞர் அஜித்குமாரை தனிப்படை காவலர்கள் அடித்துக் கொன்ற சம்பவத்தை அடுத்து நடவடிக்கை.

  • பல ஆண்டுகால வன்மத்தின் வடிகாலாக தம்மீது அவதூறு பரப்புகிறார்கள். அறநிலையத்துறை சார்பில் 32 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்.

  • வரும் 21ஆம் தேதி தொடங்குகிறது நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர். ஆகஸ்ட் 21ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிப்பு.

  • ஓலா, ஊபர் வாடகை கார் கட்டணங்கள் உயர்கின்றன. பீக் அவர் நேரங்களில் 2 மடங்கு வரை கட்டணம் உயர்த்த மத்திய அரசு அனுமதி.

  • வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 6 மாத சிறை. நீதிமன்ற நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் செயல்பட்ட வழக்கில் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் உத்தரவு.

  • சென்னையில் திருவொற்றியூரில் சாலையில் தேங்கிய மழைநீரில் மின்சாரம் பாய்ந்து பள்ளி மாணவன் உயிரிழப்பு. மின்வாரியத்தைக் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.

  • நடிகர் ஸ்ரீகாந்த் தொடர்புடைய போதைப்பொருள் வழக்கில் 4 பேருக்கு போலீஸ் காவல். நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் வைத்து போலீஸார் தீவிர விசாரணை.

  • இங்கிலாந்துக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட்டின் முதல் நாள் முடிவில் வலுவான நிலையில் இந்தியா. சுப்மன் கில்லின் அபார சதத்தால் 5 விக்கெட் இழப்புக்கு 310 ரன்கள் குவிப்பு.