இரண்டு நாள் பயணமாக இன்று மாலை தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி. தூத்துக்குடியில் சுமார் 4 ஆயிரத்து 800 கோடி ரூபாய் மதிப்புள்ள பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.
பிரதமர் மோடியின் வருகையையொட்டி திருச்சி, தூத்துக்குடியில் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள். கங்கைகொண்ட சோழபுரத்தில் பிரதமரின் ஹெலிகாப்டர் இறங்கும் ஹெலிபேட் தளம் கடைசி நேரத்தில் மாற்றம்.
ஓபிசி வரலாற்றை ஆர்எஸ்எஸ்ஸும், பாஜகவும் வேண்டுமென்றே அழித்துவிட்டன. பிரதமர் மோடியிடம் எந்த அதிகாரமும் இல்லை என டெல்லியில் நடந்த ஓபிசி மாநாட்டில் ராகுல் காந்தி பேச்சு.
பிஹாரில் 65 லட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்களின் பெயர்களை நீக்கியது தேர்தல் ஆணையம். தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் திருத்தம் மேற்கொள்ள திட்டம் எனத் தகவல்.
பாஜகவுக்கு சாதகமாக வாக்காளர் பட்டியல் சிறப்புத்திருத்தம் செய்யப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு. ஜனநாயகம் என்பது மக்களுக்கானது; அது திருடப்படக் கூடாது எனவும் கருத்து.
ஸ்டாலின் மாடல் திமுக அரசு, ஃபெயிலியர் மாடல் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம். காவிரி குண்டாறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்றாமல் முடக்கி உள்ளதாகவும் குற்றச்சாட்டு.
அன்புமணியின் நடைபயணத்துக்கு அனுமதி வழங்கக்கூடாது என டிஜிபி உத்தரவு. ராமதாஸ் மனு மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட எஸ்.பி.க்கள், மாநகர காவல் ஆணையர்களுக்கு சுற்றறிக்கை.
விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் ஆம்புலன்ஸ் செல்லும் பாதையில் விசிக நிர்வாகியின் கார் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதாக தகராறு. சுங்கச்சாவடி பூத், அலுவலக கண்ணாடிகளை உடைத்த விசிகவினரை கைது செய்த காவல் துறை.
திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஒருவர் கைது. கைதானவரை காண்பிக்க வலியுறுத்தி ஆரம்பாக்கம் காவல் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு.
சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான நபரிடம் விசாரணை தொடர்கிறது. கைதானவரின் அடையாளம், சிசிடிவியில் பதிவான நபரின் அடையாளத்துடன் ஒத்துப்போவதாக வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் பேட்டி.
ஆவடி அருகே மெக்டொனால்ட்ஸ் உணவகத்தில் வழக்கப்பட்ட பர்கரில் புழுக்கள் நெழிந்ததால் வாடிக்கையாளர் அதிர்ச்சி. புகாரின் அடிப்படையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை.
நடப்பாண்டில் 4ஆவது முறையாக முழு கொள்ளளவை எட்டியது மேட்டூர் அணை. 16 கண் மதகுகள் வழியாக 3ஆவது முறையாக உபரி நீர் திறக்கப்பட்டதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.
நீலகிரி, கோவைக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட். தேனி, தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.
கர்நாடகாவில் 10ஆம் வகுப்பு மாணாக்கருக்கு, தேர்ச்சிக்கான மதிப்பெண் குறைப்பு. தேர்ச்சி பெற ஒவ்வொரு பாடத்திலும் 30 சதவீத மதிப்பெண் எடுத்தாலே போதும் என மாநில அரசு அறிவிப்பு.
ஆபரேஷன் சிந்தூர் இன்னும் தொடர்வதாக முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுகான் திட்டவட்டம். இந்திய ராணுவம் ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும் தயார்நிலையில் இருக்க வேண்டியது அவசியம் என்றும் பேச்சு.
இந்தியா உடனான 4ஆவது டெஸ்ட் போட்டியில் 150 ரன்கள் குவித்த ஜோ ரூட். முதல் இன்னிங்ஸில் இந்தியாவை விட 186 ரன்கள் முன்னிலை பெற்றது இங்கிலாந்து அணி.