HEADLINES PT
இந்தியா

Headlines: சிபிஐக்கு மாற்றப்பட்ட திருப்புவனம் இளைஞர் கொலை வழக்கு To சுற்றுப்பயணம் செல்லும் பிரதமர்!

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, பிஐக்கு மாற்றப்பட்ட திருப்புவனம் இளைஞர் கொலை வழக்கு முதல் சுற்றுப்பயணம் செல்லும் பிரதமர் வரை உள்ளிட்டவற்றை விவரிக்கிறது.

PT WEB
  • பிரதமர் நரேந்திர மோடி இன்று முதல் 5 நாடுகளுக்கு சுற்றுப்பயணம். வரும் 6ஆம் தேதி பிரேசிலில் நடைபெறும் பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்கிறார்.

  • முக்கிய பிரச்சினைகளுக்கு விளக்கம் அளிக்காமல் வெளிநாடுகளுக்கு ஓடுகிறார் பிரதமர் மோடி. காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் விமர்சனம்.

  • பயங்கரவாதத்தில் இருந்து மக்களை காக்கும் முழு உரிமை இந்தியாவுக்கு உள்ளது. அமெரிக்காவில் நடைபெற்ற “குவாட்“ அமைப்பின் அமைச்சர்கள் மாநாட்டில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு.

  • திருப்புவனம் இளைஞர் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றி முதல்வர் ஸ்டாலின் உத்தரவு. காவலர்கள் நடத்திய தாக்குதல்தான் இளைஞரின் மரணத்துக்கு காரணம் என்பதை அறிந்து வேதனை அடைந்ததாகவும் பதிவு.

  • திருப்புவனம் இளைஞர் கொலை வழக்கு குறித்து மதுரை மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் முழுமையான விசாரணை நடத்த உத்தரவு. விசாரணை தொடர்பான அறிக்கையை வரும் 8ஆம் தேதிக்குள் சமர்பிக்கவும் நீதிமன்றம் ஆணை.

  • விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு உயிரிழந்த இளைஞரின் குடும்பத்திற்கு முதல்வர் தொலைபேசியில் ஆறுதல்.. அஜித்தின் தாயாரிடம் மன்னிப்பு கேட்டார் முதல்வர் ஸ்டாலின்.

  • கொலை செய்தது உங்கள் அரசு, Sorry என்பதுதான் உங்கள் பதிலா... நடக்கக் கூடாதது நடந்துவிட்டது என்று சொல்ல, நா கூசவில்லையா என ஸ்டாலின் மீது பழனிசாமி கடும் விமர்சனம்.

  • மத்திய அமைச்சர் அமித் ஷாவை விமர்சித்து பேசிய திமுக எம்.பி ஆ. ராசாவுக்கு கண்டனம். சென்னையில் போராட்டம் நடத்திய பாஜகவினர் கைது.

  • முருக பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்ற அண்ணாமலை, காடேஸ்வர சுப்பிரமணியம் உள்ளிட்டோர் மீது வழக்கு. மத உணர்வை புண்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தது காவல் துறை.

  • பொன்னேரியில் திருமணமான நான்கே நாட்களில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம். கணவர் மற்றும் மாமியாரை கைது செய்தது காவல் துறை.

  • 30 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த பயங்கரவாதிகள் இருவர் கைது. 15 நாட்கள் சிறைக்காவல் விதித்து சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு.

  • பரமக்குடி - ராமநாதபுரம் இடையே 1853 கோடி ரூபாய் செலவில் நான்கு வழிச்சாலை. மத்திய அமைச்சரவை ஒப்புதல்.

  • தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களில் இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணிப்பு.

  • பயணிகளுக்கான பல்வேறு சேவைகளை வழங்கும் ரயில் ஒன் செயலி அறிமுகம். முன்பதிவு இல்லா பயணச்சீட்டுகளையும் பெற்றுக் கொள்ளலாம் என ரயில்வே அறிவிப்பு.

  • கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையாவை மாற்றும் பேச்சுக்கே இடமில்லை. துணை முதல்வர் டி.கே.சிவகுமார் திட்டவட்டம்.

  • துருக்கியில் வேகமாக பரவும் காட்டுத்தீ. 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றம்.