HEADLINES pt
இந்தியா

HEADLINES|காஸா உதவி மையம் அருகே மீண்டும் தாக்குதல் முதல் கவிழ்ந்த சுற்றுலா படகு வரை!

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, காஸா உதவி மையம் அருகே மீண்டும் தாக்குதல் முதல் கவிழ் ந்த சுற்றுலா படகு வரை உள்ளிட்டவற்றை விவரிக்கிறது.

PT WEB
  • மெக்சிகோ, ஐரோப்பிய நாடுகளின் பொருட்களுக்கு 30 விழுக்காடு இறக்குமதி வரி. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முடிவுக்கு தலைவர்கள் கடும் கண்டனம்.

  • ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க சீனா செல்கிறார் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர். சீன வெளியுறவுத் துறை அமைச்சரை சந்தித்து பேச இருப்பதாகவும் தகவல்.

  • பிஹாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்திற்காக 80 விழுக்காடு மக்கள் ஆவணங்களை சமர்ப்பித்துள்ளனர் என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.

  • ராகுல்காந்தியின் குடியுரிமை தொடர்பான வழக்கை மீண்டும் விசாரிக்கும் அலகாபாத் உயர் நீதிமன்றம். புதிய ஆதாரங்கள் கிடைத்திருப்பதால் விசாரிக்க முடிவு என தகவல்.

  • காவல் மரணங்களை கண்டித்து சென்னையில் தமிழக வெற்றிக் கழகத்தினர் இன்று ஆர்ப்பாட்டம். விஜய் தலைமையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு 16 நிபந்தனைகளுடன் காவல் துறை அனுமதி.

  • தேர்தல் நெருங்குவதால் அனைவரும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும். தொண்டர்கள், நிர்வாகிகளுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்.

  • திமுக அரசுக்கு மக்கள் மீது அக்கறை இல்லை என எடப்பாடி பழனிசாமி விமர்சனம். முதல்வர் ஸ்டாலினின் ஆட்டம் இன்னும் 8 மாதங்களில் முடிந்துவிடும் எனவும் பேச்சு.

  • பண்ருட்டியில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் அதிமுக தொண்டர்கள் மோதல். காருக்கு வழிவிடுவது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பில் முடிந்த அவலம்.

  • அமித் ஷா டெல்லியில் இருந்து தமிழகத்திற்கு விமானம் ஏறினாலே திமுகவிற்கு நடுக்கம் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சனம்.

  • அன்புமணி ஆதரவாளர்களிடம் இருந்து தமது சமூக வலைதள கணக்குகளை மீட்டுத்தர வேண்டும். டிஜிபியிடம் பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்.

  • திருக்குட நன்னீராட்டு விழாவிற்காக தயாராகி வரும் திருப்பரங்குன்றம் முருகன் கோயில். வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு மின்னொளியில் ஜொலிக்கும் கோபுரம்.

  • இலங்கையில் சுற்றுலா சென்றவர்களின் படகு நடுக்கடலில் கவிழ்ந்த விபத்து. தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்த 14 பேரும் பத்திரமாக மீட்பு.

  • காஸா உதவி மையம் அருகே இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 27 பேர் உயிரிழப்பு. ஆறு வாரத்தில் 798 பேர் உயிரிழந்ததாக ஐ.நா. தகவல்.

  • இங்கிலாந்துக்கு எதிரான 3ஆவது டெஸ்டில் இந்திய அணி 387 ரன்களுக்கு ஆல்-அவுட். இரு அணிகளும் 387 ரன்களுடன் சமநிலையில் இருப்பதால் சூடுபிடிக்கும் ஆட்டம்.

  • விம்பிள்டன் டென்னிஸ் ஒற்றையர் மகளிர் பிரிவில் போலாந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் சாம்பியன். அமெரிக்க வீராங்கனை அமன்டா அனிசிமோவாவை நேர் செட்களில் வீழ்த்தி வெற்றி.