இன்றைய காலை தலைப்புச் செய்திகள் முகநூல்
இந்தியா

Headlines: பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் To 70 இந்தியா இங்கிலாந்து 2வது டெஸ்ட்!

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் முதல் 70 லட்ச ரூபாய் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் வரை உள்ளிட்டவற்றை விவரிக்கிறது.

PT WEB
  • நாட்டின் உயரிய விருதை பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கி நமீபியா கௌரவம். இரு நாடுகளும் சுதந்திரப் போராட்ட காலத்திலிருந்தே ஒருவருக்கொருவர் உறுதுணையாக இருந்து வருவதாக மோடி உரை.

  • பிஹார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ராகுல் காந்தி தலைமையில் பேரணி. மகாராஷ்டிர தேர்தல் முறைகேட்டின் தொடர்ச்சியே பிஹார் வாக்காளர் பட்டியல் திருத்தம் என குற்றச்சாட்டு.

  • திருவாரூரில் நூலகம், அருங்காட்சியகத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு. சாலைவலம் மேற்கொண்ட முதல்வருக்கு மக்கள் உற்சாக வரவேற்பு.

  • அனைத்து மக்களின் பேராதரவுடன் தமிழகத்தில் தனிப்பெரும்பான்மையுடன் அதிமுக ஆட்சி அமைக்கும். கோவை சுற்றுப்பயணத்தில் பார்த்த எழுச்சியே மீண்டும் அதிமுக ஆட்சி அமைவதற்கு சாட்சி என பழனிசாமி அறிக்கை.

  • பாஜக கூட்டணியில் அதிமுக தொடர்ந்தால் பின்னடைவை சந்திக்கும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேட்டி.

  • சென்னையில் ஆளுநர் மாளிகைக்கு இமெயிலில் வெடிகுண்டு மிரட்டல். காவல் துறை மற்றும் வெடிகுண்டு செயல் இழப்பு நிபுணர்கள் தீவிர சோதனை.

  • பாமகவின் சின்னம் மற்றும் கட்சிக் கொடியை பயன்படுத்தும் அதிகாரம் தமக்கே உள்ளது என தேர்தல் ஆணையத்துக்கு ராமதாஸ் கடிதம்.

  • சிவகங்கையில் போலீஸார் விசாரணையில் கொல்லப்பட்ட அஜித்குமாரின் குடும்பத்திற்கு சீமான் நேரில் ஆறுதல். நிகிதா மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கேள்வி.

  • கடலூர் ரயில் விபத்து தொடர்பாக விசாரிக்க தலா 3 பேர் கொண்ட இரண்டு குழுக்கள் அமைப்பு. விசாரணைக்கு ஆஜராக கேட் கீப்பர் பங்கஜ் சர்மா, லோகோ பைலட் உள்ளிட்ட13 பேருக்கு சம்மன்.

  • ரயில்வே லெவல் கிராசிங்கில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை வெளியிட்டது ரயில்வே. ரயில்வே கேட், கேட் கீப்பர் அறையில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும் என அறிவுறுத்தல்.

  • வேதாரண்யம் அருகே ஊராட்சி செயலர் தற்கொலை. சடலத்துடன் உறவினர்கள் சாலை மறியல் போராட்டம்.

  • கோவை அருகே காவல் துறை சோதனையில் 70 லட்ச ரூபாய் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல். காரில் கஞ்சாவை கடத்த முயன்ற இருவர் கைது.

  • புதுச்சேரியில் முதல்வருக்கும், துணைநிலை ஆளுநருக்கும் இடையே கருத்து மோதல் என தகவல். என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுடன் முதல்வர் ரங்கசாமி அவசர ஆலோசனை.

  • உக்ரைனுக்கு எதிரான போரில் சர்வதேச விதிகளை ரஷ்யா மீறியுள்ளது. ஐரோப்பிய யூனியனின் மனித உரிமைகள் நீதிமன்றம் தீர்ப்பு.

  • இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3ஆவது டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம். வெற்றியை தொடர இந்திய அணி முனைப்பு.

  • விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் அரையிறுதிக்கு முன்னேறினார் ஜோகோவிச். மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் முதல் நிலை வீரர் சின்னர் வெற்றி.