இந்தியா

உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கும் மனநல பரிசோதனை: நீதிபதி கர்ணன் அதிரடி

உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கும் மனநல பரிசோதனை: நீதிபதி கர்ணன் அதிரடி

webteam

கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணனுக்கு மனநல பரிசோதனை செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், உச்சநீதிமன்றத்தின் 7 நீதிபதிகளுக்கும் மனநல பரிசோதனை செய்ய வேண்டும் என நீதிபதி கர்ணன் உத்தரவிட்டுள்ளார்.

முன்னதாக கர்ணனின் மனநிலை தொடர்பாக வரும் 5ஆம் தேதி கொல்கத்தா மருத்துவமனையில் பரிசோதனை செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் தமக்கு மருத்துவ பரிசோதனை செய்ய மேற்குவங்க டிஜிபி நடவடிக்கை எடுத்தால், அவரை இடை நீக்கம் செய்யப் போவதாக கர்ணன் எச்சரித்துள்ளார்.

வன்கொடுமை சட்டத்தின் கீழ் தாம் பிறப்பித்துள்ள உத்தரவில் இருந்து தப்பிக்கவே, உச்சநீதிமன்றம் தமக்கு மனநல பரிசோதனை செய்ய உத்தரவிட்டிருப்பதாக நீதிபதி கர்ணன் தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்ற உத்தரவு குறித்து புதிய தலைமுறைக்கு தொலைபேசியில் பேசிய அவர், இந்த விவகாரம் நாடாளுமன்றத்தில் எதிரொலிக்கும் என எதிர்பார்ப்பதாகவும், தம்மை அவமதிக்கும் வகையில் உச்சநீதிமன்றம் சம்மன் அனுப்பியிருப்பதாகவும் குறிப்பிட்டார்.