குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி 10 வரிகள் பேச முடியுமா என பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா கேள்வி எழுப்பியுள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் , சிஏஏ ஆதரவுக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய அவர், காங்கிரஸ் கட்சி ஒட்டுமொத்த நம்பிக்கையையும் இழந்துவிட்டதாகக் கூறினார். குடியுரிமை திருத்தச் சட்டம் பற்றி ராகுலால் தொடர்ந்து 10 வரிகள் பேச முடியுமா என்று வினவிய நட்டா, அவ்வாறு பேசிவிட்டால் அவர் சொல்வதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம் என்றார்.
சிஏஏ குறித்து எதுவும் தெரியாத காங்கிரஸ் தலைவர்கள் , மக்களை தவறாக வழி நடத்துகின்றனர் என்று குற்றம்சாட்டினார். குடியுரிமை திருத்தச் சட்டம் யாருடைய குடியுரிமையையும் பறிக்காது என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.