பஞ்சாபை சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் கே.ஜே.சிங் மொகாலியில் உள்ள தனது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவருடன் அவரது தாயும் இறந்து கிடந்துள்ளார். இருவரின் கழுத்திலும் வெட்டுக்காயங்கள் இருப்பதால், இருவரும் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதனிடையே கே.ஜே.சிங் கொலை செய்யப்பட்டிருப்பதாகவும், கொலையாளிகளை விரைந்து கண்டுபிடித்து தக்க தண்டனை வழங்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சியான அகாலி தளம் கேட்டுக்கொண்டுள்ளது. இந்த நிலையில் சம்பவம் குறித்து விசாரணை நடத்த சிறப்பு விசாரணைக்குழுவை அமைத்து பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங் உத்தரவிட்டுள்ளார்.
அண்மையில் கர்நாடகாவில் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொல்லப்பட்டார். திரிபுராவிலும் ஒரு பத்திரிகையாளர் கொல்லப்பட்டிருந்தார். தற்போது பஞ்சாபில் பத்திரிகையாளர் கே.ஜே.சிங் மர்மமான முறையில் இறந்துள்ளார்.