இந்தியா

சுதந்திர இந்தியாவில் 70 ஆண்டுகள் மின்சாரம் இல்லாமல் கழித்த கிராமம்

சுதந்திர இந்தியாவில் 70 ஆண்டுகள் மின்சாரம் இல்லாமல் கழித்த கிராமம்

webteam

சட்டீஸ்கரில் உள்ள ஒரு மலை கிராமத்திற்கு  முதல் முறையாக இன்று மின்சார இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது

சட்டீஸ்கர் மாநிலம் பல்ராம்பூர் மாவட்டத்தில் உள்ளது ஜோகாபாத் கிராமம். கடந்த 70ஆண்டுகளாக மின்சார வசதியே இல்லாமல் தங்கள் நாட்களை இக்கிராம மக்கள் கழித்துள்ளனர். தற்போது முதல் முறையாக இந்த கிராமத்திற்கு மின்சார இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மின்விளக்குகள் எரிவதை கண்ட இம்மக்களின் முகம் பிரகாசிக்கிறது. இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், நாங்கள் தற்போது மகிழ்ச்சியாக உள்ளோம், தற்போது எங்கள் கிராமத்திற்கு மின்சாரம் கிடைத்துள்ளது. இனி எங்கள் குழந்தைகள் எந்த சிரமமும் இல்லாமல் படித்து வாழ்வில் முன்னேறுவார்கள் என்றனர். ஜோகாபாத், மலை கிராமம். சுற்றிலும் காடுகளால் சூழப்பட்ட பகுதி என்பது குறிப்பிடத்தக்கது.