இந்தியா

ஜேஎன்யு மாணவர் உமர் காலித் மீது துப்பாக்கிச்சூடு

webteam

டெல்லியில் ஜேஎன்யு மாணவர் தலைவர் உமர் காலித் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.

ஜேஎன்யு (டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம்) வளாகத்தில் கடந்த 2016ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், நாடாளுமன்ற தாக்குதல்
குற்றவாளி அப்சல் குருவுக்கு ஆதரவாகவும், இந்தியாவுக்கு எதிராகவும் மாணவர்கள் முழக்கங்கள் எழுப்பியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து ஜேஎன்யு மாணவர் சங்கத் தலைவர்கள் கண்ணையா மற்றும் உமர் காலித் மீது தேசதுரோக வழக்கு பதிவு
செய்யப்பட்டது. இந்த விவகாரம் இந்திய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இன்று மத்திய டெல்லியில் உமர் காலித் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில் அவர் காயம் ஏதும் இன்றி
அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் உடனே அவரை மீட்டு, பாதுகாப்பாக
அழைத்துச்சென்றனர்.