இந்தியா

தேர்வு எழுத கழுதைக்கு ஹால் டிக்கெட்!

தேர்வு எழுத கழுதைக்கு ஹால் டிக்கெட்!

webteam

காஷ்மீர் மாநிலத்தில் அரசுப் பணியாளர் தேர்வு ஒன்றில் பங்கு பெற கழுதைக்கு தேர்வுக் கூட நுழைவுச் சீட்டு வழங்கப்பட்டுள்ளது.

ஸ்ரீநகரை சேர்ந்த குறும்புக்கார நபர் ஒருவர் கழுதையின் படத்தை ஒட்டி தேர்வுக் கூட நுழைவுச்சீட்டுக்கு விண்ணப்பித்துள்ளார். அதில் தேர்வு எழுதுபவரின் பெயர் பொன்னிற கழுதை (Kachur Khar) எனவும்.  தந்தையின் பெயர்  கருப்பு கழுதை (Krihun khar) எனவும் பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவையும் அவர் அனுப்பியிருந்த படத்தை கவனிக்காமல் நுழைவுச் சீட்டும் குறிப்பிட்ட முகவரிக்கு சென்றது. கழுதையுடன் கூடிய நுழைவுச்சீட்டு ஃபேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. அரசுப் பணியாளர் தேர்வு ஆணையத்தின் அலட்சியம் குறித்து பலரும் விமர்சித்து வருகிறார்கள்.

சமூகவலைதளத்தில் இந்த விவகாரம் பரபரப்பாக பேசப்பட்டு வருவதையடுத்து அந்த விண்ணப்பத்தை ஜம்மு அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம் தடை செய்துள்ளது. தேர்வாளரின் புகைப்படமும், பெயரும் தவறாக இருப்பதை அடுத்து அந்த விண்ணப்பம் தடை செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்னர்.

ஜம்மு காஷ்மீரில் இதுபோன்று நடப்பது புதிதல்ல  கடந்த 2015 ஆம் ஆண்டு நடைப்பெற்ற நுழைவுத்தேர்வுக்கு பசு மாடு படத்துடன் நுழைவுச்சீட்டு அனுப்பட்டு இருந்தது. அதிலும் இதேபோல் பொன்னிற மாடு என விண்ணப்பிக்கப்பட்டிருந்தது.