இந்தியா

காணாமல்போன ராணுவ வீரர் சுட்டுக் கொலை: சடலமாக கண்டெடுப்பு

காணாமல்போன ராணுவ வீரர் சுட்டுக் கொலை: சடலமாக கண்டெடுப்பு

rajakannan

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் காணாமல்போன ராணுவ வீரரின் சடலம், துப்பாக்கி குண்டுகள் துளைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது.  

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டம், சசூன் கிராமத்தை சேர்ந்த ராணுவ வீரர் இர்பான் அஹமது கான் என்பவரை நேற்று மாலை முதல் காணவில்லை. அடையாளம் தெரியாத நபர்களால் கடத்தப்பட்டிருக்கலாம் என்று செய்திகள் வெளியானது. இதுதொடர்பாக, வழக்குப்பதிவு செய்த போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் சோபியான் மாவட்டத்தில் அவரது சடலம் இன்று கண்டெடுக்கப்பட்டது. அவரது உடலில் துப்பாக்கி குண்டுகள் துளைக்கப்பட்டிருந்தது. தீவிரவாதிகள் இர்பானை கடத்தி சுட்டு கொன்றிருக்கலாம் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீவிரவாதிகளை கைது செய்ய போலீசார் தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சம்பவத்திற்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. ராணுவ வீரர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு ஜம்மு-காஷ்மீர் முதலமைச்சர் மெகபூபா முஃப்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அதேபோல், எதிர்க்கட்சி தலைவரும் முன்னாள் முதல்வருமான ஓமர் அப்துல்லா கண்டனம் தெரிவித்துள்ளார்.