இந்தியா

அதிவேக இன்டர்நெட்: ஜியோதான் டாப்

அதிவேக இன்டர்நெட்: ஜியோதான் டாப்

Rasus

4ஜி அதிவேக இன்டர்நெட் டவுன்லோடு செய்வதில் ஜியோ நிறுவனமே தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. 

ஏப்ரல் மாதத்தில் டெலிகாம் நிறுவனங்களின் இன்டர்நெட் வேகம் குறித்து டிராய் (TRAI) மேற்கொண்ட ஆய்வில், ரிலையன்ஸ் ஜியோவின் வேகம் நொடிக்கு 19.12 மெகாபிட் என தெரிவித்துள்ளது. இதன்மூலம், ஒரு படத்தை 16mbps வேகத்தில் 5 நிமிடத்தில் டவுன்லோடு செய்ய முடியும். 

இதேபோல், கடந்த ஏப்ரல் மாதத்தில் ஐடியா 4ஜி நெட்வொர்க்கின் வேகம் 13.70mbps, வோடஃபோன் 13.38mbps வேகத்தில் இருந்தது என்றும், ஏர்டெலின் வேகம் 10.15mbps- ஆக இருந்தது என்றும் டிராய் தெரிவித்துள்ளது. இதன்மூலம், ஏப்ரல் மாதத்தில் 4ஜி அதிவேக இன்டர்நெட் டவுன்லோடு செய்வதில் ரிலையன்ஸின் ஜியோ முன்னிலையில் உள்ளது.