பிரதமர் மோடியின் முகத்தை இளம் பெண் ஒருவர் தனது முதுகில் டாட்டூ குத்தி இருக்கிறார்.
ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியை சேர்ந்தவர் ரித்தி சர்மா. வயது 22. தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் இவர், தனது முதுகில், பிரதமர் மோடியின் உருவத்தை பச்சைக் குத்தியிருக்கிறார்.
இதுபற்றி அவர் கூறும்போது, ‘’ நாட்டின் சாதனைகளை பலர் ஒவ்வொரு வழிகளில் கொண்டாடி வருகின்றனர். நான் பிரதமர் மோடியின் முகத்தை, முதுகில் பச்சைக் குத்திக் கொண்டாடுகிறேன். நான் அவரது தீவிர ரசிகை. நாட்டின் முன்னேற்றத்துக்கு அவர் எடுக்கும் நடவடிக்கைகள் பாராட்டுக்குரியது. காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததை வரவேற்கி றேன். அந்த மகிழ்ச்சியை இப்படி வெளிப்படுத்தி இருக்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார், ரித்தி சர்மா.
இந்த டாட்டூவை வரைந்த வினய் சோனி என்பவர் கூறும்போது, ‘’பலருடைய முகங்களை டாட்டூவாக வரைந்திருக்கிறேன். பிரதமர் மோடியின் முகத்தை டாட்டூவாக வரைந்தது இதுதான் முதன் முறை. இதுபோன்ற ரசிகர்களுக்கு நன்றி’’ என்று தெரி வித்துள்ளார்.