இந்தியா

ஜார்க்கண்ட் தேர்தல்: முன்னிலையில் பாஜக- காங்கிரஸ் கடும் போட்டி

Rasus

ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தம் உள்ள 81 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு சமீபத்தில் தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன.

தற்போது முன்னிலை நிலவரம் தெரியவரத் தொடங்கியுள்ளது. காங்கிரஸ் கூட்டணி 33 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. அதற்கு அடுத்தப்படியாக 32 இடங்களில் பாஜக முன்னிலை வகிக்கிறது. ஜேவிஎம் 3 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. தொடர்ந்து வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.