ஜார்க்கண்ட் மாநிலத்தில் பழமையான வைத்தியநாதர் கோயிலில் பக்தர்கள் தரிசிக்க அனுமதிக்குமாறு வலியுறுத்தி, பாஜக எம்எல்ஏக்கள் சட்டப்பேரவை முன் உடுக்கை அடித்தபடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தியோகர் மாவட்டத்தில் உள்ள வைத்தியநாதர் கோயில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. இதைக் கண்டித்தும், பக்தர்களுக்கு அனுமதியளிக்குமாறு வலியுறுத்தி பாஜக எம்எல்ஏக்கள் சட்டப்பேரவை முன் போராட்டம் நடத்தினர். தியோகர் தொகுதி பாஜக எம்எல்ஏவான நாராயண் தாஸ் உள்ளிட்டோர், கழுத்தில் மாலை அணிந்து கொண்டு கையில் உடுக்கை அடித்தபடி முழக்கமிட்டார். பக்தர்கள் வராததால் கோயிலை நம்பியுள்ள சிறு வியாபாரிகளும் தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.